பங்களாதேஷ் முதல் இன்னிங்சில் இலங்கையை விட 476 ஓட்டங்கள்; பின்தங்கியுள்ளது

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (31) ஆட்டம் நிறுத்தப்படும் போது, தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பங்களாதேஷ் அணியில் மஹ்முதுல் ஹசன் ஜோய் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு, துடுப்பெடுத்தாடும் ஜாகிர் ஹசன் 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 531 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 93 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 92 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 70 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்று (01) போட்டியின் மூன்றாவது நாளாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.