மட்டக்களப்பில் புனரமைக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயம் மீளத் திறப்பு

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழிப் பாடசாலை நேற்று (27) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் உத்தியோகபூர்வமாக மீள திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டத்திலுள்ள சிங்கள மகாவித்தியாலயம் கடந்த 30 வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரன சூழ்நிலை காரணமாக கடந்த 1990 ஆண்டு முதல் பூட்டப்பட்டிருந்த நிலையில் தற்போதய கிழக்கு மாகாண ஆளுநரின் முயற்சியினால் மீள் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. 1954 ஆம் ஆண்டளவில் சிங்கள மொழிமூல கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் … Read more

யாழிற்கு விரைந்துள்ள முக்கிய குழு! வீதிகளில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் (Photos)

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோர் அடங்கிய குழு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளது.  2022/2023ஆம் ஆண்டின் காலபோக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் இருப்பினை விநியோகித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசி பகிர்ந்தளித்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பணிக்குழாம் … Read more

கடற்பரப்புகளிலும் பல இடங்களில் மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.மழை நிலைமை:நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு முதல் கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் … Read more

இலங்கையில் அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் சீனா

இலங்கையில் நாளந்தம் 4 தொன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய புதிய சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. சீன முதலீடாக இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தற்போதுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மிகவும் பழமையானது. இதனால் புதிய தொழில்நுட்பத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். … Read more

இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை,மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (27) நிதியமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் 73 ஆவது வருடாந்த அறிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ள இது 04 பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன்படி, ஆண்டின் பொருளாதார விவகாரங்களின் நிலையை விளக்குகின்ற 08 அத்தியாயங்களையும், 30 புள்ளிவிபர அத்தியாயங்களையும் முதல் பகுதியில் உள்ளடங்குகின்றது. இரண்டாவது பகுதியானது, … Read more

பேஸ்புக் தொடர்பில் வெளியான தகவல்

பேஸ்புக்கின் அடுத்த ஊழியர் குறைப்பு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Meta நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் விடுத்துள்ள விசேட குறிப்பொன்றை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளன. இது தொடர்பான குறிப்பில் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளதாவது, இம்முறை ஊழியர் குறைப்பு மே மாதம் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.  பேஸ்புக் ஊழியர்களை குறைப்பு   அதன்படி, பேஸ்புக் ஊழியர்களை குறைப்பது இது மூன்றாவது முறையாகும். முந்தைய இரண்டு தடவைகளிலும் சர்வதேச ரீதியில் சுமார் 21,000 தொழிலாளர்கள் … Read more

யாழ். நெடுந்தீவை உலுக்கிய படுகொலை! 100 வயது மூதாட்டியும் பலி

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது,  100 வயது மூதாட்டியான பூரணம் இன்று (27.04.2023) மாலை உயிரிழந்துள்ளார்.  வெளியான மருத்துவ அறிக்கை அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். சந்தேகநபர் கைது  100 வயதான … Read more

இலங்கை இன்று மறுமலர்ச்சிப் பாதைக்கு பிரவேசித்துள்ளது

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றுவோம்- ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரை இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட கலவரம், தீவைப்பு, அரச வங்குரோத்து நிலைமை போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை 8 மாதங்களில் மாற்றியமைத்து வெற்றிகரமாக மாற்ற முடிந்ததாகவும், அது ‘Srillnka comeback story ’ என … Read more

இலங்கை கடலோர காவல்படையினரால் மற்றுமொரு தொகுதி கடலாமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடலோர காவல்படையினரால் மற்றுமொரு தொகுதி கடலாமை குஞ்சுகள் அண்மையில் கடலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவையில் உள்ள உயிர்காக்கும் நிலைகளில் பணிபுரியும் இலங்கை கடலோர காவல்படை பணியாளர்களால், 1139 கடலாமை முட்டைகள் இயற்கை வாழ்விடங்களில் இருந்து வெளியெடுக்கப்பட்டது பாதுகாப்பாக அடைகாக்கப்பட்டது என இலங்கை கடலோர காவல்படை ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளவத்தை, கல்கிசை, பாணந்துறை, மிரிஸ்ஸ, ஹிக்கடுவ, மொரகல்ல மற்றும் தெஹிவளை ஆகிய கடற்கரைகளில் இருந்தும் இக்காலப்பிரிவில் 3714 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடுக்கப்பட்டுள்ளது. … Read more

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (video)

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றம் இன்று (27.04.2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் எடுத்துச்செல்லப்பட்ட விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலாம் இணைப்பு வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பூஜை வழிபாடுகள் நேற்று (26.04.2023) ஆரம்பமாகி உள்ளன. வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன் ஏனைய விக்கிரகங்களும் … Read more