வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மூடி விடாது தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கு ஏதுவான கார ணிகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடிவிடாது அரச மற்றும் தனியாரின் ஒத்துழைப்புடன் கூட்டு வர்த்தகமாக தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கான அவசியமும் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய வர்த்தக மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்தார். தேசிய கடதாசி சங்கத்தினை 2013, 2014 மற்றும் 2015 ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கை கடந்த (20) தேசிய பொருளாதார மற்றும் உள்ளக திட்டமிடல் தொடர்பான மேற்பார்வை குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதே செயற்குழுவின் … Read more

இவ்வருடத்திற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர திட்டம்

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார மாநாட்டை ஜூலை மாத இறுதியில் இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் … Read more

பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்கள் பெரும் பங்கை வகிக்கலாம் – சிறந்த பெண் தொழில்முனைவோர்களை பாராட்டும் விழாவில் ஜனாதிபதி உரை. நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத் துறைக்குள் பெண் தொழில்முனைவோர் பெரும் பங்கை ஆற்ற முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண் வர்த்தகர்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் … Read more

நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பல சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் மதத் தலைவர்களுக்கான பரந்த அளவிலான பணியுள்ளது – தேசிய சர்வமத மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். இனவாதமும் மதவாதமும் அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் மதத் தலைவர்கள் … Read more

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பம் கோரல் மார்ச் 15ஆம் திகதியுடன் நிறைவு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க. அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15 ஆம் … Read more

குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் எக்கச்சக்கமான வெளிநாட்டுப்பறவைகள் – காணப் படையெடுக்கும் மக்கள்!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் வருடாந்தம் தஞ்சமடையும் வெளிநாட்டுப்பறைவகள். இக் குளத்தை அண்டிய பகுதியில் சில மாதங்கள் தங்கியிருக்கும் இப் பறவைகள் முட்டையிட்டு குஞ்சிபொரித்ததும் தனது தாயகம் நோக்கி மீண்டும் திரும்பும் என சொல்லப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் சில தீவுப்பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி பறந்துவரும் இப் பறவைகள் டிசம்பர் மாதப்பகுதியில் இருந்து ஏப்ரல் வரை இங்கு தங்கியிருப்பதாக சூழலியலாளர்களால் தெரிவிக்கின்றனர். இப் பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடுகளை கட்டி … Read more

இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது – பாடசாலை மாணவர்கள் வெளிக்கள வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்

இன்றும் நாளையும் (பெப்ரவரி 29 மற்றும் மார்ச் 01) சுற்றுச்சூழலில் நிலவும் அதிக வெப்ப நிலை மேலும் அதிகரிக்க கூடும் என கிடைக்கப் பெற்றுள்ள தகவலின்படி, நாட்டிலுள்ள எந்தவொரு பாடசாலை மாணவர்களும் வெளிப்புற விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகளிலோ அல்லது விளையாட்டு நிகழ்வுகளிலோ அல்லது  எந்தவொரு வெளிக்கள செயற்பாடுகளிலுமோ பங்குபற்றுவதை தவிர்க்குமாறு சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கும் வகையில் ஏற்கனவே மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகளுக்கு உரிய … Read more

இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நிலைப்பாட்டில் இலங்கை அர்பணிப்புடன் இருக்கும் 

அதிகார மோதல்கள் இன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நிலைப்பாடுகளை பேணுவதில் இலங்கை அர்பணிப்புடன் இருக்குமென இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடல்சார் செயற்பாடுகளின் சுதந்திரத்திற்காக இலங்கை அர்பணிப்புடன் இருப்பதாலேயே செங்கடல் பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை முன்வந்திருப்பதாகவும், ஆறு நாள் யுத்தத்தின் விளைவாக சுயஸ் கால்வாய் மூடப்பட்டதால் கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் அறிவுறுத்தினார். அதனால் வரையறைகள் அற்ற … Read more

தேசிய இப்தார் நிகழ்விற்கு செலவிடப்படும் பணம் காஸா மோதலினால் இடம்பெயர்ந்த குழந்தைகளின் சுகாதார நலனுக்காக வழங்கப்படும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund) இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை இந்த நிதியத்திற்கு பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இதற்காக மக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய … Read more

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு இன்று (28) மட்டக்களப்பு மாவட்ட செயலக கோட்டை வளாகத்தில் இடம்பெற்றது. கற்புலக் கலைத்துறை விரிவுரையாளரான ஏ. எல். அஸ்மர் ஆதமின் வழிகாட்டுதலின் கீழ், கற்புலக் கலைத் தொழில் நுட்பத்துறையில் 2ஆம் வருடத்தில் கல்வி கற்கும் சுமார் 70 மாணவ மாணவிகள் தமது 2ஆம் கல்வித் தவணைக்கான வெளிக்கள ஓவியச் செயற்பாடுகள் என்ற பாடத்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் … Read more