Best Budget 5G phones: 15 ஆயிரம் ரூபாயில் கிடைக்கும் சிறந்த 5G போன்கள்!

டிஜிட்டல் துறையில் இந்தியா மிகப்பெரிய அளவு வளர்ச்சி கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக பொதுமக்கள் பெரும்பாலும் இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்களை நம்பியே உள்ளார்கள். இந்தியாவில் இப்போது அனைத்தும் ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது. மக்கள் வாங்கும் விலையில் பல நிறுவனங்கள் அதிநவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன. இதனால் மக்களும் அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை இப்போது 5G இணைய சேவை தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலான பகுதிகளில் 5G சேவை கிடைக்கும். இதனால் மக்கள் தற்போது 5G … Read more

Galaxy A14 5G வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியுமா கீர்த்தி சுரேஷால்? டெஸ்ட் பண்ணி பார்த்துடுவோம்!

Samsung நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அதிநவீன சிறந்த ப்ராடக்டுகளை உருவாக்குவதில் பெயர்போனது. அப்படி சமீபத்தில் வைரல் செய்தியாக வலம்வருவது Galaxy A14 5G. ஆம், வேகமாக ஓடும் உங்கள் உலகத்திற்கு ஈடாக நீங்களும் ஓட பெட்ரோல் போல வந்து இறங்கியிருக்கிறது. அதிலும் அப்டேட்டட் 5Gயின் உண்மையான பவரை நீங்கள் பார்க்க வேண்டுமானால் Galaxy A14 5G மட்டுமே சிறந்த தேர்வாக இருக்க முடியும். உண்மையான 5Gயை அனுபவிக்க நினைப்பவர்களுக்கான ஒரு பாக்கெட்-ஃப்ரண்ட்லி டிவைசாக உருவாக்கப் பட்டிருக்கிறது இது. … Read more

Indus Battle Royale | பிளே ஸ்டோரில் முன்பதிவுக்கு வந்த கேம்: பப்ஜிக்கு மாற்று?

புனே: Indus Battle Royale எனும் புதிய ஆக்‌ஷன் கேம் இந்தியாவில் முன்பதிவுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பப்ஜி கேமுக்கு மாற்று என சொல்லப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த சூப்பர் கேமிங் எனும் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த புதிய கேமின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. கடந்த 2020 வாக்கில் இந்தியாவில் பப்ஜி உட்பட பல்வேறு சீன செயலிகள் முடக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த 2021-ல் ‘இந்திய பப்ஜி’ என சொல்லப்படும் Battlegrounds Mobile … Read more

பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் டெக்னோ நிறுவனம் ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ நிறுவனம் ஸ்பார்க் … Read more

Mr.Tweet | ட்விட்டரில் தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்

கலிபோர்னியா: ட்விட்டர் சமூக வலைதளத்தில் தனது பெயரை மிஸ்டர் ட்வீட் என மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இவர் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தற்போது செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளத்தில் தனது பெயரை அவ்வப்போது மாற்றும் வழக்கத்தை கொண்டவர் மஸ்க். அந்த வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அவரே ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். இனி தானே நினைத்தாலும் அந்தப் பெயரை மாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். புதுப் பெயர் வந்தது எப்படி? … Read more

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கும் கோக் நிறுவனம்?

குருகிராம்: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் குளிர்பான நிறுவனமான கோக கோலா களம் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனை தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தெரிவிக்கும் டிப்ஸ்டரான முகுல் சர்மா ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். கொக கோலா நிறுவனம் குளிர்பானம் பிரிவு சந்தையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. இதற்காக பிரபல ஸ்மார்ட்போன் பிராண்ட் உடன் இணைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட் … Read more

இந்தியாவில் ஒரு மணி நேரம் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்

சென்னை: இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதால் பயனர்கள் அதன் சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். இந்நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மைக்ரோசாப்டின் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 போன்றவற்றின் சேவைகள் முடங்கியதாக தகவல். அவுட்லுக் சேவை முடக்கத்தால் பயனர்கள் தங்களால் மின்னஞ்சல் அனுப்பவும், பெறவும் முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு குறித்து இந்திய பயனர்கள் அதிகம் புகார் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து முடங்கிய தளங்கள் … Read more

ஓலா S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வீல் உடைந்ததால் பெண் படுகாயம்! மீண்டும் ஒரு OLA EV விபத்து!

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விபத்து என்பது அதிகரித்துவருகிறது. அதுவும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை அதிகரித்த தொடக்க காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீவிபத்து, கோளாறு போன்றவை அடிக்கடி தொடர்ச்சியாக ஏற்பட்டு பலர் உயிர் இழந்துள்ளார்கள். சமீபத்தில் பார்மர் என்ற நபர் அவரின் ஓலா ஸ்கூட்டரை ஓட்டி சென்ற மனைவிக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் மனைவி தற்போது அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறியுள்ளார். ஓலா S1 மற்றும் S1 Pro ஆகிய ஸ்கூட்டர்களில் முன்பக்கம் … Read more

சாம்சங் Galaxy S23 சீரிஸ் போனுடன் வெளியாகும் அட்டகாசமான Galaxy Book 3 லேப்டாப்!

இந்தியாவில் பிப்ரவரி 1 மிகப்பெரிய அறிமுகம் காத்திருக்கிறது. தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் அதன் பிரபல ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடலான Galaxy S23 சீரிஸ் உடன் சேர்த்து அதன் புதிய Galaxy Book 3 லேப்டாப் வெளியிடுகிறது. இந்த லேப்டாப் முன்பதிவு இப்போது அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் ஆப் மூலமாக தொடங்கியுள்ளது. இதனுடன் நமக்கு 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சலுகைகள் கிடைக்கவுள்ளன. Galaxy Book 3 Series இந்த லேப்டாப் மொத்தமாக 3 … Read more

பூமியின் மையப்பகுதி தலைகீழாக சுற்றத்தொடங்கியுள்ளது! நமக்கெல்லாம் என்ன நடக்கும்?

நமக்கு பூமியின் மேல் பகுதியில் என்ன நடக்கிறது என்பது மட்டுமே தெரியும். ஆனால் பூமிக்கு உள்ளே ஒரு தனி உலகம் இருப்பது தெரியுமா? இதனை கடந்த 1935 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதற்கு பெயர் Core அதாவது மையப்பகுதி என்று பெயர் வைத்தனர். இதுகுறித்து பல கற்பனையான Journey to the center of the earth போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் வெளியாகின. நம்முடைய பூமியில் ஏற்படும் இயற்கை பேரிடர்களுக்கும் இந்த Core பகுதிக்கும் பெரும் … Read more