சிலாவத்துறையில் கடற்படையினரால் சட்டவிரோதமான முறையில் பிடிபட்ட கடலட்டைகளுடன் 02 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் 2024 மே 14 ஆம் திகதி மாலை சிலாவத்துறை, பண்டரவெளி கடற்கரைப்பகுதியில் ஒரு தேடல் நடவடிக்கை மூலம், போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோதமாக பிடிபட்ட கடலட்டைகள் சுமார் மூவாயிரத்து ஐநூறு அளவுடன் (3500) இரண்டு (02) நபர்கள், மற்றும் கெப்வண்டி ஒன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை … Read more

பெண் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்

பெண் முயற்சியாளர்களுக்கான முயற்சியாளர் வலுவூட்டல் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.   நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 106 முயற்சியாளர்களில் நேர்முக பரீட்சையின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட  67 முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.    முயற்சியாளர்களுக்கான இப்பயிற்சியினை JSAC நிறுவனமானது Asia Foundation நிதி அனுசரணையினூடாக வழங்கிவருகின்றது.    இவ்வாறு பயிற்சியினை பெற்றுக்கொண்ட பயனாளிகளில் … Read more

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் பாதுகாப்பிற்காக நோயாளர் உரிமை தொடர்பான பிரகடனம் ஒன்றை வெளியிட நடவடிக்கை

வைத்தியசாலைகளில் தங்கியிருக்கும் நோயாளர்களின் உரிமை தொடர்பான பிரகடனம் ஒன்றை வெளியிடுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் துறை சார்  மேற்பார்வை தொடர்பான செயற்குழுவில் வைத்தியசாலைகளில் தங்கியிருக்கும் நோயாளர்களின் பாதுகாப்பிற்கான உரிமை தொடர்பானபிரகடனம் ஒன்றை எதிர்காலத்தில் வெளியிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கம்பஹா மாவட்டத்தின் வதுபிடிவல ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கண்டறிவதற்கான விசேட கண்காணிப்பு பயணத்தில் கலந்து கொண்ட போது வைத்தியசாலை அதிகாரிகளுடன் (15) இடம்பெற்ற  கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேபோது வைத்தியசாலையின் விடுதி, கிளினக், … Read more

பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாஹீம் உல் அஸீஸ், எச்ஐ (எம்) அவர்கள் நேற்று (16) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார். இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் நட்பு ரீதியான கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கிடையில் பல வருடங்களாக நிலவி வரும் நல்லெண்ணம் மற்றும் தற்போதைய நட்புறவு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக நினைவு கூர்ந்தார். இராணுவத் … Read more

சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இராணுவத் தளபதி படையினருக்கு வலியுறுத்தல்

30 வருடகால யுத்தத்தின் போது நாட்டைப் பாதுகாப்பதற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்து ஓய்வுபெற்ற போர்வீரர்கள் குழுவொன்று சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களால் நிர்வகிக்கப்படும் மோசடிக்கு பலியாகியுள்ளது. இந்த வீரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, கூலிப்படை குழுக்களின் ஒரு பகுதியாக ரஷ்ய-உக்ரேனிய போருக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், இதன் போது பலர் தங்கள் உயிரை இழந்துள்ளதுடன், இன்னும் சிலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இலங்கை இராணுவத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இந்த கௌரவப் படைவீரர்கள் தற்போது வெளிநாட்டில் கூலிப்படையினராக உள்ளமை மனவருத்தத்தை … Read more

மியான்மாருடன் பொருளாதார மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்த பிரதமர் அழைப்பு…

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நேற்று (2024.05.16) மியான்மரின் பதில் தூதுவர் திருமதி லீ யி வின் அவர்களை அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், தேயிலை மற்றும் தென்னை வர்த்தகம், கனிமங்கள், பௌத்த சுற்றுலா போன்றவற்றுக்கு விசேட கவனம் செலுத்துவதன் மூலம் சுற்றுலா போன்ற பல துறைகளில் பொருளாதார மற்றும் … Read more

க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காக பாடசாலைகளில் உயர் தர வகுப்புகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு

இம்முறை க. பொ.த (சாதாரண தரப்) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காகப் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) வகுப்புகள் ஜூன் மாதம் நான்காம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் தற்போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அச்சுற்றுநிருபம் சகல கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை இச் சுற்று நிருபம் கிடைக்கப் பெறாத அதிபர்கள் இது தொடர்பாக மாகாண மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான … Read more

புதிய சட்ட முறைமையுடன் புதிய அரசியல் கலாச்சாரமொன்று நாட்டில் உருவாக்கப்படும்!

‘ஊழல் எதிர்ப்பை’ அரசியல் கோசமாக பயன்படுத்திய காலம் முடிந்துவிட்டது. ஊழலை ஒழிக்க பல புரட்சிகர நகர்வுகள் எடுக்கப்பட்டுள்ளன. திருடர்களைக் காக்க வந்தாகக் கூறப்பட்ட அரசாங்கம் திருடர்களைப் பிடிக்கச் சட்டம் கொண்டு வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 75 புதிய சட்டங்கள் நிறைவேற்றபட்டுள்ளன. தெற்காசியாவில் புதிய சட்டங்களைச் செயற்படுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளது. ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தின் செயல்பாட்டில் தங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெற்காசியாவில் புதிய … Read more

நாட்டிற்கு வருகை தரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் விமான நிலையத்தில் வைத்து நினைவுப் பரிசாக தேயிலை அன்பளிப்பு

நாட்டிற்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கும் தனது பயணத்தை முடித்து மீண்டும் தத்தம் நாட்டிற்குத் திரும்பும் போது இலங்கைத் தேயிலை தொடர்பாக நினைவுபரிசொன்றை விமான நிலையத்தில் வைத்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். தேயிலைக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகக் கடந்த (13) விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதற்கிணங்க சிலோன் … Read more

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் நீண்ட காலமாக நிலவி வருகின்ற எல்லைப் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் விசேட கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று (16) இடம் பெற்றது. குறித்த விசேட கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது. இதன் போது இவ்விரு மாவட்டங்களுக்கிடையில் காணப்படும் எல்லைப் பிரச்சினைகள் மற்றும் காணி பிணக்குகள் தொடர்பாக பல்வேறு … Read more