அயோத்தி ராமர் கோவிலில் பணியில் இருந்த ஜவானுக்கு AK 47 துப்பாக்கிக் காயம்! காரணம் என்ன?

Accident In Ayodhya Ram Temple Complex : அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் நடந்த விபத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட பிஏசி ஜவானுக்கு காயம் ஏற்பட்டது… 

வேட்பாளர் விலகல்கள் முதல் கைகூடாத கூட்டணிகள் வரை: பாஜக ‘இலக்கு 400’-க்கு ஆபத்தா?

அடுத்தடுத்து கூட்டணி முறிவு, பாஜக வேட்பாளர்கள் விலகல், சில மாநிலங்களில் தேர்தல் போட்டியில் இருந்து கட்சியே விலகல் என அடுத்தடுத்த ‘சம்பவங்கள்’ அரங்கேறும் சூழலில், இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 400 தொகுதிகளை வெல்வது என்ற பாஜகவின் ‘இலக்கு’ சாத்தியமா? – இதோ சற்றே விரிவான பார்வை… விலகும் வேட்பாளர்கள்! – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான ஒரு மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் பட் தான் போட்டியிட போவதில்லை … Read more

சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்டவரும், பாஜக வேட்பாளருமான ரேகாவிடம் உரையாடிய பிரதமர் மோடி!

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்டவரும், பசிர்ஹத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான ரேகா பத்ராவை, பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது ரேகாவின் தேர்தல் பணிகள் குறித்து பிரதமர் விசாரித்தார். ரேகா பத்ராவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, தொகுதி மக்களின் மனநிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ரேகாவை, ‘சக்தி ஸ்வரூபம்’ என்று அழைத்தார். பெங்காலியில் தனது பேச்சைத் தொடங்கிய பிரதமர், “நீங்கள் ஒரு பெரிய பொறுப்பை ஏற்கப் போகிறீர்கள் எவ்வாறு … Read more

“பிரதமர் பதவி – சோனியா, ராகுல் செய்த தியாகங்கள்…” – அடுக்கிய டி.கே.சிவகுமார்

புதுடெல்லி: ‘சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பிரதமர் பதவியை தியாகம் செய்துள்ளனர்’ என்ற கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “இந்திரா காந்தி குடும்பத்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியை ஒன்றுபடுத்த முடியும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சி இக்கட்டான சூழலில் இருந்தபோது, 2004-ம் ஆண்டு நாட்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை சோனியா ஆட்சிக்கு கொண்டுவந்தார். அவர் (சோனியா காந்தி) காங்கிரஸ் அரசை மீண்டும் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருந்தார். … Read more

பிஜேடி உடன் கூட்டணி இல்லை: ஒடிசாவில் பாஜக 18 வேட்பாளர்கள் அறிவிப்பு

ஒடிசா மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப் பதிவு மே 13-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே, ஒடிசா மாநிலத்தை ஆளும் பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க மார்ச் முதல் வாரம் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால், மார்ச் 22-ல் ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சிங் சமல் தேர்தலில் தனியாக களமிறங்க உள்ளதாக … Read more

“பெண்களுக்கும் பெண் தெய்வத்துக்கும் அவமதிப்பு” – மம்தா குறித்த பாஜக எம்.பி பேச்சுக்கு திரிணமூல் பதிலடி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து பாஜக எம்.பி. திலீப் கோஷின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, “மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவரும், கட்சியும் அவரை தொகுதியில் இருந்து வெளியேற்றிய விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று சாடியுள்ளது. முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுத்திருந்த பாஜக எம்.பி.திலீப் கோஷ், “தீதி (மம்தா) கோவாவுக்குச் செல்லும்போது நான் கோவாவின் மகள் என்று கூறுகிறார். திரிபுரா செல்லும் போது நான் … Read more

பாஜக வேட்பாளர் ஆன சீரியல் ராமர்… யார் இந்த அருண் கோவில்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணத்தில் ராமராக நடித்த நடிகர் அருண் கோவில், அவரது சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் மீரட் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். பாஜக இந்த தேர்தலுக்கு பல நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அருண் கோவில் இந்தத் தொகுதியில் வெற்றிக் கனியைப் புசிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 111 பேர் கொண்ட … Read more

Mumbai has emerged as Asia's billionaire hub, surpassing Beijing | பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளிய மும்பை… ஆசியாவின் கோடீஸ்வர நகரப் பட்டியலில் முதலிடம்!

சர்வதேச அளவில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலை ஹூருன் குளோபல் ரீச் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும். இந்த ஆண்டிற்கான பட்டியலில், மும்பை, சீன தலைநகர் வெஜின்கை பின்னுக்குத் தள்ளி, ஆசியாவின் கோடீஸ்வர நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது.

டெல்லி | பிரதமர் வீட்டை முற்றுகையிட முயற்சி; ஆம் ஆத்மி கட்சியினர் கைது

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் டெல்லி படேல் சவுக் மெட்ரோ நிலையத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட முயன்ற பஞ்சாப் அமைச்சரும், ஆம் ஆத்மி பிரமுகருமான ஹர்ஜோத் சிங் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதனைக் … Read more

சிறையில் இருந்தபடியே சுகாதாரத் துறைக்கான உத்தரவுகளைப் பிறப்பித்த கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று சிறையில் இருந்தபடி சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது அவர் சிறையில் இருந்தபடி பிறப்பிக்கும் இரண்டாவது உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது. மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை. இதனை நிராகரித்து … Read more