மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம்; காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம்

மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமனை நேரில் சந்தித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஆறுதல் கூறினார்.

காரியம் முதல் அஸ்தி கரைப்பு வரை: இந்தியாவில் இறுதிச் சடங்குகளும் கார்ப்பரேட் வசமாகிறதா?

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டெல்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த trade fair-ல் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு விதமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்றிருக்கின்றன. வித்தியாசமான முன்னெடுப்புகளை கொண்ட நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றிருக்கும் நிலையில், தனித்துவமாக இருக்கும் மும்பையைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் மட்டும் பலரது கவனத்தையும் ஈர்த்ததோடு சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது. அது என்னவெனில், நமக்கான இறுதிச் சடங்கை முன்பதிவு செய்து … Read more

குஜராத் தேர்தல் பரப்புரைக்காக சிறுமியை பயன்படுத்திய பிரதமர் மோடி: தேர்தல் விதியை மீறியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

காந்திநகர் : தேர்தல் பரப்புரைக்காக சிறுமியை பயன்படுத்திய பிரதமர் மோடிக்கு எதிராக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக பா.ஜ.க. வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடியின் அருகில் நின்றிருக்கும் சிறுமி ஒருவர் தனது குஜராத்தி மொழியில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், மோடியையும், பா.ஜ.க-வையும் புகழ்ந்து பேசிய சிறுமியின் கழுத்தில் பாஜக-வின் அடையாள சின்னத்துடன் கூடிய துப்பட்டா இருந்தது. ராமர் கோயில் உள்ளிட்ட பல விஷயங்கள் … Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியது தமிழக அரசு

டெல்லி: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

மோர்பி பால விபத்து நாளில் 3,165 டிக்கெட் விற்பனை – நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்

மோர்பி: குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் மச்சு நதி மீது அமைந்துள்ள தொங்கு பாலம் கடந்த மாதம் 30-ம் தேதி அறுந்து விழுந்தது. இதில் 40 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர். அண்மைக்காலத்தில் நாட்டில் நடந்த மோசமான பேரிடர் சம்பவமாக இது கருதப்படுகிறது. விபத்து தொடர்பாக, பாலத்தை பராமரித்து வந்த ஓரிவா குழுமத்தின் 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ஜாமீன்மனு மோர்பி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விபத்து தொடர்பான தடயவியல் … Read more

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறது என்பது ஒன்றிய அரசின் வார்த்தை ஜாலம்: உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

டெல்லி : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படலாம் என்று ஒன்றிய அரசு வார்த்தையளவில் மட்டுமே பேசுவதாக உச்சநீதிமன்றம் காட்டமாக விமர்சித்துள்ளது. ஒன்றிய அரசு தங்களுக்கு சாதகமான வகையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பதவி காலத்தை கருத்தில் கொள்ளாமல் நியமிப்பது மோசமான முன் உதாரணம் என்றும், உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை உச்சநீதிமன்றத்தில் உள்ளது போல கொலீஜியம் முறையில் தேர்வு செய்ய உத்தரவிட கோரி உச்சநீதி … Read more

சபரிமலை பக்தர்கள் விமானங்களில் இருமுடி பைகளை எடுத்து செல்ல அனுமதி

புதுடெல்லி: சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காய், நெய் ஆகியவை அடங்கிய இருமுடி பைகளை தங்களுடன் எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பணியகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து பிசிஏஎஸ்-ன் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் இருமுடி கட்டிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில்,விமானங்களில் பயணிக்கும் சபரிமலை பக்தர்களின் நன்மைையை கருதி இருமுடியை தங்களது கைப்பைகளிலேயே கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. … Read more

சத்தீஸ்கரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ராய்பூர்: சத்தீஸ்கரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி..!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து ஆலோசிக்க சமீபத்தில் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டிற்கான ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. … Read more

ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு பணம் வழங்கப்பட்டதா? – பாஜகவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு

மும்பை: காங்கிரஸ் எம்.பி. ராகுலுடன் பாதயாத்திரையில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பாஜக குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி முதல், மகாராஷ்ராவில் நடைபயணம் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் யாத்திரையின்போது, இந்தி … Read more