“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்போம்” – அமித் ஷா மீண்டும் உறுதி

கொல்கத்தா: “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் மீட்போம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலம் செரம்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “இந்த தேர்தலானது இண்டியா கூட்டணியின் ஊழல் தலைவர்களுக்கும், நேர்மையான அரசியல்வாதி நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நடக்கும் தேர்தல். பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோதும், பிரதமராக இருந்த போதிலும் அவர் மீது ஒரு … Read more

“பட்ஜெட்டில் 15%-ஐ சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது” – பிரதமர் மோடி

நாசிக்: “காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது அரசு பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க விரும்பியது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், மதத்தின் அடிப்படையில் பட்ஜெட், வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கில் உள்ள நாசிக் மாவட்டத்தின் பிம்பல்கான் பஸ்வந்த் பகுதியில், மஹாயுதி வேட்பாளர்களான மத்திய அமைச்சர் பாரதி பவார் (பாஜக), ஹேமந்த் கோட்சே (சிவசேனா) ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று … Read more

தென்மேற்கு பருவமழை எப்போது? – இந்திய வானிலை மையம் அறிவிப்பு

புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை வரும் மே 31ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மழைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. வெப்ப அலைகள் தற்போது குறைந்து, ஒருசில பகுதிகளில் மழை தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை … Read more

“பாஜகவுக்கு வாக்களித்தால், நான் மீண்டும் சிறை செல்ல வேண்டும்” – கேஜ்ரிவால் பேச்சு @ டெல்லி

புதுடெல்லி: “மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும்” என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், “மக்கள் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நடைபெறும் மக்களவைத் தேர்தலில் டெல்லி மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மியும், காங்கிரஸும் இணைந்து போட்டியிடுகின்றன. இன்று சாந்தினி சவுக் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி.அகர்வாலை ஆதரித்து மாடல் டவுனில் நடந்த … Read more

தெறிப்புச் செய்திகள் @ மே 15 – ‘நியூஸ் கிளிக்’ நிறுவனர் விடுதலை முதல் ‘ஃபீனிக்ஸ்’ ஆர்சிபி வரை

‘நியூஸ் கிளிக்’ நிறுவனர் கைது செல்லாது: உச்ச நீதிமன்றம்: நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபிர் புர்காயஸ்தாவை கைது செய்து சிறையில் அடைத்தது செல்லாது என்றும், அவரை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “இந்த வழக்கில் கைதுக்கான ஆதாரங்களின் நகல் வழங்கப்படவில்லை. எனவே, அவரது கைது செல்லாது. பிரபிர் புர்காயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் கைது செய்தது சட்டவிரோதமானது. எனவே, அவர் இந்த வழக்கில் … Read more

சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் பிரகாஷ் கப்டே என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜாம்னர் நகரைச் சேர்ந்த இவர், சில தினங்கள் முன்தான் சொந்த ஊருக்கு விடுமுறைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், மே 14-ம் தேதி நள்ளிரவு 1:30 மணியளவில் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜாம்னர் காவல் … Read more

சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கியது மத்திய அரசு

புதுடெல்லி: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ் வழங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சிஏஏ அமலுக்கு பிறகு முதல் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டன. மத்திய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லா இன்று 14 பேருக்கு குடியுரிமை … Read more

ராஜஸ்தான் சுரங்க விபத்தில் ஒருவர் பலி; 14 பேர் பத்திரமாக மீட்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்தும் மீட்பும்: ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தில் உள்ளது இந்துஸ்தான் காப்பர் லிமிடட் நிறுவனம். இதன் சுரங்கத்தை ஆய்வு செய்ய கொல்கத்தாவில் இருந்து அதிகாரிகள் குழு ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) வந்திருந்தது. அந்தக் குழுவானது ஆய்வை முடித்துக் கொண்டு நேற்றிரவு 8 மணியளவில் சுரங்கத்தில் இருந்து வெளியே வர முற்பட்டது. அப்போது லிஃப்ட்டின் ஒரு … Read more

அமேதியில் காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி: கை ஓங்குமா, தாமரையே நீடிக்குமா?

Lok Sabha Elections: அமேதியில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் நிறுத்தாமல் காங்கிரஸ் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டதாக பாஜக கூறியது, அக்கட்சியின் ஆணவத்தை காட்டுகிறது என்றார் சர்மா. 

“பிரதமர் மோடி பிரச்சாரங்களில் இந்து – முஸ்லிம் அரசியலை தவிர வேறு ஏதுமில்லை” – காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி: ‘மோடியின் உத்தரவாதம்’ வீழ்ச்சியடைந்ததாலும் ‘400 ப்ளஸ் வெற்றி’ முழக்கம் மவுனமாக புதைந்து போனதாலும் அதிகாரத்தில் இருந்து வெளியேற இருக்கும் பிரதமர் மோடி பேசுவதற்கு இந்து – முஸ்லிம் அரசியலைத் தவிர வேறு விஷயங்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றின்போது, “இந்து – முஸ்லிம் அரசியலைக் கையிலெடுக்கத் தொடங்கினால் நான் பொது வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவனாகிப் போவேன்” என்று தெரிவித்திருந்த நிலையில், … Read more