ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

பெங்களூரு: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் எம்பியுமான‌ பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் களமிறங்கினார். கடந்த 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகின. ஹாசன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்த … Read more

இந்திரா காந்திக்கு ‘கை’ கொடுத்த மேதக்!

இந்திரா காந்தி உட்பட காங்கிரஸார் படுதோல்வி அடைந்தனர். ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது. மொராஜி தேசாய் பிரதமரானார். ஆனால், அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சில தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இவர்கள் தங்களின் தலைவர் இந்திரா காந்தியை எப்படியாவது வெற்றி பெற செய்து மக்களவைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டனர். இதனால் 1978-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் காங்கிரஸ் எம்பி வீரேந்திர பாட்டீல் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததால், … Read more

“ராகுல் காந்தியை இந்திய பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது” – பிரதமர் மோடி விமர்சனம்

ஆனந்த் (குஜராத்): “பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரை இந்தியாவின் பிரதமராக்க விரும்புகிறார்கள்” என்று ராகுல் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சவுதரி ஃபவத் ஹூசைன், ராகுல் காந்தியை பாராட்டி பேசிய சில நாட்களுக்கு பின்னர் பிரதமர் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார். குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற இடத்தில் இன்று (மே 2) நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி கூறுகையில், “காங்கிரஸ் கட்சி இங்கே வீழ்ச்சி … Read more

‘ஏழைகளை வெயிலை விட அதிகம் சுட்டெரிப்பது பாஜக கொள்கைகளே!’ – மோடிக்கு கடிதத்தில் கார்கே பதிலடி

புதுடெல்லி: “வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் ஏழை மக்களை அதிகம் சுட்டெரித்துள்ளது. நம் மக்களைப் பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வரலாறு காணாத விலைவாசி உயர்வு பற்றி பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை” என விமர்சித்து, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் காங்கிரஸ் தொடர்பாக பொய்யான தகவல்களை மோடி கூறியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் … Read more

சர்ச்சைக்குரிய எம்.பி பிரிஜ் பூஷணுக்கு பதிலாக மகனுக்கு சீட் வழங்கியது பாஜக

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் கைசரகஞ்ச் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான பிரிஜ் பூஷணுக்கு பதிலாக, இந்த முறை அவரது மகன் கரண் பூஷண் சிங்குக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. மல்யுத்த வீராங்கணைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷண் உள்ளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கைசர்கஞ்ச் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ள பிரிஜ் பூஷணின் இளைய மகன்தான் கரண் பூஷண் சிங். இவர் தற்போது உத்தரப் பிரதேச மாநில மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். அதேபோல், … Read more

“பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாக்கு கேட்ட மோடி மன்னிப்புக் கோர வேண்டும்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா என்ற பாலியல் குற்றவாளியை மேடையில் வைத்துக் கொண்டு, அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார். பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் அவமதித்துள்ளார்” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். கர்நாடகாவில் இந்தப் … Read more

“கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பர்” – அகிலேஷ் யாதவ் பேச்சு

புடவுன்: “கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார். உத்தரப் பிரதேச மாநிலம் புடவுனில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஆதித்யா யாதவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “பாஜகவினால் அரசியல் சாசனத்துக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை, அவர்களின் முடிவால் உங்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தங்களின் சான்றிதழ்களைப் பார்க்கும்போது என்ன நினைத்துக் கொள்வார்கள் … Read more

உ.பி.யில் மேனகா காந்தி வேட்புமனு தாக்கல் – ‘விலகி’ நின்ற பாஜக பிரமுகர்கள்!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கான ஊர்வலத்தில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் யாருமே கலந்துகொள்ளாமல் விலகி நின்றது தெரிய வந்துள்ளது. காங்கிரஸின் காந்தி குடும்பத்து இளைய மருமகளாக இருப்பவர் மேனகா காந்தி. பாஜகவின் மூத்த தலைவராக இருக்கும் இவர் தன் கட்சிக்காக உ.பி.யின் சுல்தான்பூரில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது மகனான வருண் காந்திக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. … Read more

வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கிய ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கர்நாடகாவின் ஹாசன் எம்.பி.,யான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம், குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் … Read more

அமேதியில் ராகுல் காந்தி போட்டி…. இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு

Lok Sabha Elections: ராகுல் காந்தி எளிமையான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் வேட்புமனு  தாக்கல் செய்யும்போது, காந்தி குடும்பத்தினர் மற்றும் பிற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அவருடன் இருப்பார்கள்.