‘‘எங்களின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்க முடியாது’’ – இந்தியா கண்டனம்

புதுடெல்லி: எங்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது என அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அமெரிக்க வெளியுறவுத் துறையின் நேற்றைய கருத்துகள் தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரியை அழைத்து இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் சமீபத்திய கருத்துக்கள் தேவையற்றவை. நமது தேர்தல் மற்றும் சட்ட செயல்முறைகள் மீதான இத்தகைய வெளிப்புற குற்றச்சாட்டுகள் … Read more

தேசப் பாதுகாப்பை பலவீனமாக்கும் ‘அக்னி வீரர்’ திட்டத்தை காங். நிறுத்தும்: கார்கே வாக்குறுதி

புதுடெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அக்னி வீரர் திட்டத்தில் மேம்பாடுகளையும் மாற்றங்களையும் செய்ய தயாராக இருப்பதாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறி இருக்கிறார். கோடிக்கணக்கான தேசபக்தியுள்ள இளைஞர்கள் மீது மோடி அரசால் திணிக்கப்பட்ட அக்னிவீர் திட்டம் இனி வேலை செய்யாது என்பதையே இது காட்டுகிறது. முதலில் லட்சக்கணக்கான இளைஞர்களின் … Read more

முதல்வர் பதவியில் இருந்து நீங்குங்கள்.. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.. கெஜ்ரிவால் நிம்மதி

Delhi High Court, Arvind Kejriwal: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

“இறுதி மூச்சு வரை என் தொகுதி மக்களுடன் உறவு…” – பாஜகவில் சீட் கிட்டாத வருண் காந்தி உருக்கம்

புதுடெல்லி: “இறுதி மூச்சு வரை பில்பித் தொகுதி மக்களோடு இருப்பேன்” என்று அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், வருண் காந்தி மிகவும் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பில்பித் தொகுதியின் எம்பியாக இருப்பவர் வருண் காந்தி. 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவர் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். 1996-ல் இருந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தொகுதியின் எம்பியாக வருண் காந்தி அல்லது அவரது தாயார் மேனாகா காந்தி இருந்துள்ளனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் … Read more

தேர்தல் முடிவும் வரை எவ்வளவு பணம் கையில் கொண்டு செல்லலாம்? விதிகள் சொல்வது என்ன?

இந்தியாவில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ரொக்கமாக பணம் அல்லது அதிக நகைகள் எடுத்து செல்ல கூடாது.  உரிய ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்.  

முதல்வராக கேஜ்ரிவால் நீடிப்பதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பான மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) மன்மோகன் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘இது நீதிமன்ற தலையீட்டுக்கு அற்பாற்பட்டது. அரசின் மற்றப் பிரிவுகளும் சட்டத்தின்படி ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்று … Read more

லோக்சபா தேர்தல் 2024: உங்கள் ஒரு ஓட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது

Lok Sabha Elections Budget: தேர்தல் நடத்த எவ்வளவு செலவாகிறது? ஒவ்வொரு வாக்காளருக்கும் எவ்வளவு செலவிடப்படுகிறது? அரசியல் காட்சிகள் எவ்வளவு செலவழிக்கின்றனர்? என்பதைக் குறித்து பார்ப்போம்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் காவல் நிறைவு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் காவல் இன்று முடிவடையும் நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. அவரை இன்று (மார்ச் 28) வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து … Read more

மேனகாவுக்கு சீட்; மகனை கைவிட்ட பாஜக: காங்., அழைப்பு வந்தும் மவுனம் காக்கும் வருண்

புதுடெல்லி: தாய் மேனகா காந்திக்கு போட்டியிட வாய்ப்பளித்து மகன் வருண் காந்தியை பாஜக கைவிட்டுள்ளது. இதனால், காங்கிரஸில் சேர அழைப்பு வந்தும் மவுனம் காக்கிறார் வருண் காந்தி. மேலும், பாஜகவின் நகர்வால் சுயேச்சையாகவும் போட்டியிட முடியாமல் வேறு கட்சியிலும் சேர முடியாமல் சிக்கலில் சிக்கியுள்ளார் வருண் காந்தி. முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு அவர் எம்.பியாக உள்ள உத்தரப்பிரதேசம் சுல்தான்பூரில் போட்டியிட பாஜக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. இதே மாநிலத்தின் பிலிபித் தொகுதியில் பாஜக எம்பியாக அவரது … Read more

அர்விந்த் கேஜ்ரிவால் கைது குறித்து கருத்து; அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டிப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்த நிலையில் அந்நாட்டின் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகார வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும் என்று நேற்று முன்தினம் அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. … Read more