பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இனி முகக்கவசம் அணிய வேண்டும்..!!

2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மெல்ல மீண்டு இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் இப்போது அடுத்த மாறுபாடு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் XBB, BA2 வகை தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனையொட்டி விமான நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் திரும்பும் பயணிகளுக்கு முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே மருத்துவமனைகளில் இருக்கும் … Read more

வரலாறு பாடப் புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்படவில்லை: NCERT

புதுடெல்லி: வரலாறு பாடப் புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்படவில்லை என்று NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார். வரும் 2023-24 கல்வி ஆண்டு முதல் கற்பிக்கப்பட இருக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக NCERT தயாரித்துள்ள புதிய வரலாற்று பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்களின் வரலாறு நீக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இது குறித்து NCERT-ன் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறி இருப்பதாவது: ”12ம் வகுப்பு மாணவர்களுக்காக NCERT தயாரித்துள்ள வரலாற்று பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் … Read more

தியேட்டர்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்? பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே கடந்த 1-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் … Read more

தியேட்டர்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்? பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே கடந்த 1-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் … Read more

அதானி, ராகுல் காந்தி விவகாரம்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கம்

புதுடெல்லி: தொழிலதிபர் அதானி, ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்றம் நேற்று காலையில் கூடியது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் நீண்ட நாட்களாக உடல்நலமில்லாமல் இருந்து கடந்த மார்ச் 29-ம் தேதி காலமான பாஜக மக்களவை எம்.பி. கிரிஷ் பாபட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் … Read more

அருணாச்சலப் பிரதேச பகுதிகளின் பெயர்களை மாற்றுவதால் யதார்த்த நிலை மாறாது: சீனாவுக்கு இந்தியா பதில்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றுவதால், அந்தப் பகுதிகளின் மீது இந்தியாவுக்கு இருக்கும் உரிமை சார்ந்த யதார்த்த நிலை மாறிவிடாது என்று இந்தியா தெரிவித்துள்ளது. 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா: அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஓர் அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் எனக் குறிப்பிட்டுகிறது. இந்நிலையில், இந்த … Read more

“பிரதமரே, ஏன் இந்த பயம்?” – சீன அத்துமீறல், அதானி விவகாரத்தில் ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: “அதானியின் ஷெல் நிறுவனங்களில் இருக்கும் ரூ.20 ஆயிரம் கோடி பற்றியும், இந்திய எல்லைக்குள் தொடர்ந்து சீனா அத்துமீறி வருவது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்?” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வினவியுள்ளார். அதானி விவகாரம் என்பது அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியானதிலிருந்து காங்கிரஸும், ராகுல் காந்தியும் பிரதானமாக எழுப்பிவரும் கேள்வியாக உள்ளது. அந்தக் கேள்விக்கு மீண்டும் பதில் கோரியிருக்கிறார் ராகுல் காந்தி. டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த … Read more

ரயில் பயணிகள் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்த வழக்கு: உத்தர பிரதேசத்தில் ஒரு நபரை கைது செய்திருப்பதாக தகவல்!

கேரளாவின் கோழிக்கோடு அருகே ரயிலில் சென்ற பயணிகள் மீது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், நொய்டா விரைந்த போலீசார் ஷாருக் சைபி என்ற நபரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் சென்ற விரைவு ரயில், எலத்தூர் பகுதியில் சென்றபோது ஒருவர், பயணிகளின் மீது திடீரென எரிபொருளை ஊற்றி தீ வைத்ததில், அச்சத்தில் 3 பேர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து பலியாகினர்.  9 … Read more

சிக்கிமில் பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு; 50 பேரை காணவில்லை என தகவல்

கேங்டாக்: சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 50 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சிக்கிமில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாதுலா மலை முகடுகள் உள்ளன. சீன எல்லையை ஒட்டிய இந்த பகுதிகளில் மார்ச் மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், நாதுலாவுக்குச் செல்லும் ஜெ.என். சாலையில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த சாலையின் 13வது மைலுக்கு அப்பால் செல்ல … Read more