பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறாரா ஷகீன் ஷா அப்ரிடி?

லாகூர், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனையடுத்து அந்த அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த பாபர் அசாம் நீக்கப்பட்டு 20 ஓவர் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டன் யாரும் நியமிக்கப்படவில்லை. சமீபத்தில் புதிய தலைவராக … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளா – ஜாம்ஷெட்பூர் இடையிலான ஆட்டம் சமன்

பெங்களூரு, 12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடந்த 15-ம் தேதி முதல் நேற்று வரை ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுமார் 15 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் இந்த தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற … Read more

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் சிக்கி ரெட்டி ஜோடி தோல்வி

மாட்ரிட், ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சிக்கி ரெட்டி- சுமீத் ரெட்டி இணை 17-21 மற்றும் 12-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஹனிங்டியாஸ் மெண்டரி- ரினோவ் ரிவால்டி இணையிடம் வீழ்ந்தது. இந்த ஆட்டம் 29 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இத்துடன் இந்த தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. தினத்தந்தி Related Tags : ஸ்பெயின் … Read more

ஐ.பி.எல்: லக்னோ அணியில் டேவிட் வில்லிக்கு பதிலாக மாற்று வீரர் சேர்ப்பு

லக்னோ, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி தனிப்பட்ட காரணத்துக்காக அணியில் இருந்து விலகி விட்டார். இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியை அவரது அடிப்படை விலையான ரூ.1¼ கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த காலங்களில் அவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளில் அங்கம் வகித்திருந்தார் என்பது … Read more

மியாமி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா இணை சாம்பியன்

மியாமி, அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, குரோஷியாவின் இவான் டோடிக் – அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் இணையுடன் மோதியது. இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை போபண்ணா இணை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் போபண்ண இணை … Read more

இந்தியாவுக்கு கிடைசாச்சு புதிய வேகப் புயல்… பஞ்சாப் அணியை பதறவைத்த மயங்க் யாதவ் – யார் இவர்?

IPL 2024 LSG vs PBKS Highlights: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இன்று இத்தொடரின் 11ஆவது லீக் போட்டி லக்னோ எக்னா மைதானத்தில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியின் டாஸை வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  குறிப்பாக, லக்னோ அணியின் கேப்டனாக இன்று நிக்கோலஸ் பூரன் செயல்பட்டார். … Read more

Hardik Pandya: ஹர்திக் பாண்டியா மீதான கடும் எதிர்ப்பு… அஸ்வின் சொன்ன அசத்தல் அட்வைஸ்!

Mumbai Indians Captain Hardik Pandya News: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் இதுவரை தோல்வியடையாத நிலையில், டெல்லி, மும்பை அணிகள் இதுவரை இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. லக்னோ அணி தனது முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், … Read more

9 ஆண்டுகளாக ஆர்சிபியை துரத்தும் சோகம்! பெங்களூருவில் கொடி பறக்கவிடும் கேகேஆர்

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். அதற்கு காரணம் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கவுதம் காம்பீர். இருவரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். கம்பீர் சீனியர் என்பதால் ஜூனியர் விராட் கோலியிடம் மரியாதை கொடுக்க வேண்டும், தனக்கு கீழ் தான் நீ என்கிற தொனியிலேயே அவரை ட்ரீட் செய்வார். மரியாதை வேண்டுமானால் கொடுக்கிறேன், … Read more

ஆர்சிபியை சொல்லி தோற்கடித்த கவுதம் கம்பீர்! அந்த அணி மீது ஏன் அவ்ளோ வெறுப்பு?

ஐபிஎல் 2024 தொடரின் 10வது லீக் போட்டியில் கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று விளையாடி 83 ரன்கள் எடுக்க, அவருக்கு பக்கபலமாக கிரீன் 33 ரன்களும், மேக்ஸ்வெல் 28 ரன்களும் எடுத்தனர். இறுதிகட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 சிக்சர்கள் விளாசி 8 … Read more

நியூசிலாந்து முன்னாள் வீரருக்கு அமெரிக்க அணியில் இடம்

நியூயார்க், கனடா கிரிக்கெட் அணி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. அமெரிக்கா- கனடா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 7-ந்தேதி ஹூஸ்டனில் நடக்கிறது. இந்த தொடருக்கான அமெரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மோனக் பட்டேல் தலைமையிலான அந்த அணியில் நியூசிலாந்தை முன்னாள் வீரரான கோரி ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். ஆண்டர்சன் சர்வதேச ஒருநாள் போட்டியில் 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 36 பந்துகளில் … Read more