ஐ.பி.எல்.: பஞ்சாப்பை வீழ்த்தி 3-வது வெற்றிபெற்றது பெங்களூரு அணி.!

மொகாலி, கோலிக்கு கேப்டன் பதவி 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மாலை மொகாலியில் நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மல்லுகட்டின. பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் அவருக்கு பதிலாக சாம் கர்ரன் அணியை வழிநடத்தினார். இதே போல் பெங்களூரு அணியில் கேப்டன் பொறுப்பை விராட் கோலி கவனித்தார். வழக்கமான கேப்டன் பாப் டு பிளிஸ்சிசுக்கு விலாப்பகுதியில் லேசான காயப் பிரச்சினை இருப்பதால் … Read more

ஐபிஎல்: கொல்கத்தாவை போராடி வீழ்த்தி டெல்லி அணி முதல் வெற்றி

புதுடெல்லி, மழையால் பாதிப்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியதால் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார். 2021-ம் ஆண்டுக்கு பிறகு அவர் … Read more

பந்து வீச தாமதம்: லக்னோ கேப்டனுக்கு அபராதம்.!

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோஅணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. தாமதமாக பந்து வீசியது தெரியவந்ததால், கேப்டன் என்ற முறையில் லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. தினத்தந்தி Related Tags : கே.எல்.ராகுல் அபராதம் KL Rahul Penalty

விளையாட்டு வீரர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: இந்திய விளையாட்டு கழகம் அறிவிப்பு

சென்னை, இந்திய உணவு கழகம் சார்பில் விளையாட்டில் சிறந்து விளங்கும் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான (2023-24) விளையாட்டு உதவித் தொகைக்கு தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விளையாட்டு கழகத்தின் தென்மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் ஆகியவற்றின் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 15-18 மற்றும் 18-24 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த உதவி … Read more

தாக்கத்தை ஏற்படுத்தும் விதியால் பலனடையும் இந்திய வீரர்கள்..!

மும்பை, தற்போதைய 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (இம்பேக்ட்) என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு இன்னிங்சின் பாதியில் ஒரு வீரரை வெளியேற்றி விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க முடியும். அந்த மாற்று வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசலாம். இதனால் 2-வது பேட்டிங் செய்யும் அணியினர் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனையும், பந்து வீசும் அணி கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ‘புதிய விதியால் இப்போது நாம் … Read more

சூதாட்டத்துக்காக முகமது சிராஜை தொடர்பு கொண்ட டிரைவர் – அமலாக்க அதிகாரிகள் பிடித்து விசாரணை

ஐதராபாத், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் 29 வயதான முகமது சிராஜ், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் முகமது சிராஜை, சூதாட்டத்துக்கு தகவல் பெற ஐதராபாத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் அணுகிய விவரம் கசிந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மாதம் நடந்தது. இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. … Read more

மும்பை அணி 'ஹாட்ரிக்' வெற்றி – திலக் வர்மா, அர்ஜூனுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

ஐதராபாத், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. இதில் முதலில் ஆடிய மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கேமரூன் கிரீன் 64 ரன்களும், திலக் வர்மா 37 ரன்களும் விளாசினர். தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 178 ரன்னில் அடங்கி 3-வது தோல்வியை சந்தித்தது. … Read more

சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணியில் பிரனாய், சிந்து

புதுடெல்லி, கலப்பு அணிகளுக்கு இடையிலான 18-வது சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவில் உள்ள சுசோவ் நகரில் அடுத்த மாதம் (மே) 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. மலேசியா, சீன தைபே, ஆஸ்திரேலியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் … Read more

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ அசத்தல் வெற்றி..!

ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ராகுல் மற்றும் மேயர்ஸ் இருவரும் தொடக்கத்தில் தடுமாறினர். இதில் ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை ராஜஸ்தான் வீரர்கள் வீணடித்தனர். இதனால் இந்த இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் … Read more

ஆசிய விளையாட்டுக்கு தயாராக சென்னை போட்டி உதவிகரமாக இருக்கும் – கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேட்டி

பெங்களூரு, இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஆகஸ்டு 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதையொட்டி இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- எங்கள் அணியில் பெரும்பாலான வீரர்கள் முதல்முறையாக சென்னையில் விளையாட உள்ளனர். 2007-ம் ஆண்டு சென்னையில் நடந்த ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி … Read more