2023 ஐபிஎல் தொடருடன் தோனி ஒய்வு ? ரோகித் சர்மா ஓபன் டாக்…

மும்பை , 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன .இந்த போட்டிக்காக அணைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டி சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் … Read more

ஐபிஎல்-லில் இருந்து விலகுகிறாரா ரோகித்…? கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ் – காரணம் என்ன..?

மும்பை, 16-வது ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, குஜராத், ராஜஸ்தான் உட்பட மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. ஐபிஎல் தொடரில் அதிகப்படியான கோப்பைகளை வென்ற மும்பை அணி கடந்த இரு சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாமல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் மீண்டும் பழைய பார்முக்கு வந்து வெற்றி கோப்பையை மும்பை கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால், … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. ரொமாரியோ ஷெப்பர்ட் 22 பந்தில் 44 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 19 பந்தில் 41 ரன்கள் குவித்தார். அதன்பின், 221 ரன்கள் எடுத்தால் … Read more

சென்னை அணிக்கு பின்னடைவு…! ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச மாட்டார் என தகவல்

சென்னை, 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை நடக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பிய னான குஜராத் டைட்டன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல்.போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் – ஷதாப் கான் சாதனை…!

ஷார்ஜா, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் … Read more

பீலே, மரடோனாவுக்கு அருகில் உலக சாம்பியன் மெஸ்ஸிக்கு சிலை..!

கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து அர்ஜென்டினா அணி சாம்பியன் ஆனது. 1978, 1986-க்குப் பிறகு அர்ஜென்டினா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது.மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. உலகக்கோப்பை 2022 தொடரில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், … Read more

காணாமல் போன கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை பத்திரமாக மீட்பு

லக்னோ, இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், இவரது தந்தை மஹாதேவ் ஜாதவ் 75, இன்று காலை புனே நகரில் கோத்ரூட் என்ற பகுதியிலிருந்த போது வெளியே சென்றவர். வீடு திரும்பவில்லை. திடீரென காணமானல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேதர் ஜாதவ் குடும்பத்தினர் அவரை வெளியே தேடிச் சென்றுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பீதியடைந்த அவர்கள் மஹாதேவ் ஜாதவ் காணமானல் போனது குறித்து லக்னோவில் அலங்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் … Read more

பிரசித் கிருஷ்ணா காயம்: மாற்று வீரரை அறிவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்…!

ராஜஸ்தான், இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல் 2023) தொடரி வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளனர். இதில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் ஒருவர். முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக பிரசித் கிருஷ்ணா அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். அதிலிருந்து அவர் குணம் அடைய சில வாரங்கள் ஆகும் … Read more

நள்ளிரவு முதல் வரிசையில் காத்திருந்து…அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்…!

சென்னை, ஒவ்வொரு ஆண்டும் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன். இதைத் தொடர்ந்து சென்னை அணிக்கான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி நடக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. கொரோனா காரணமாக கடந்த … Read more

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு…!

வெல்லிங்டன், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல்ம் போட்டியில் 198 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒருநாள் தொடர் முடிவடைந்த பின்னர் இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், … Read more