காயத்தால் அவதி: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பெரும்பாலான ஆட்டங்களை தவற விடும் தீபக் சாஹர்

புதுடெல்லி,  15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது. வருகிற 26-ந்தேதி ஐ.பி.எல். தொடங்க உள்ள நிலையில் தீபக் சாஹர் காயத்தில் சிக்கியிருப்பது சென்னை அணி நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.  கடந்த மாதம் 20-ந்தேதி கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியின் போது அவருக்கு வலது கால் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் தசைநார் கிழிந்து … Read more

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியல்: ரகானே, புஜாராவுக்கு சறுக்கல்

மும்பை, சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தத்தை, அவர்கள் ஊதியத்தின் அடிப்படையில் கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், கிரேட் ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு … Read more

கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியில் ரகானே-புஜாரா இடங்களை நிரப்பப்போவது யார்..?

மொகாலி,  இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. இது இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.  இந்த நிலையில், இப்போட்டியில் அஜிங்கியா ரகானே மற்றும் சடேஷ்வர் புஜாரா ஆகிய இருவருடைய இடத்தை பிடிப்பதற்கான போட்டி … Read more

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது இந்திய கிரிக்கெட் அணி

டுப்லின், இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பிறகு இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஜூன் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பிறகு … Read more

விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி

மொகாலி, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி அபார பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை காண முதலில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்  தற்போது இப்போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு  பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.இந்த போட்டி … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: ஐதராபாத் அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.  இந்த தொடரில் இன்று நடைபெற்ற  ஆட்டத்தில் ஐதராபாத் – ஜாம்ஷெட்பூர்  அணிகள் மோதின.போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய  ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். அந்த அணியின் பீட்டர் ஹார்ட்லி  போட்டியின் 28-வது … Read more

பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடை; உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவிப்பு

மலேசியா, உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.   இதனால் ரஷியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. ரஷிய அணி கால்பந்து தொடர்களில் பங்கேற்க பிபா கூட்டமைப்பு ஏற்கனவே தடை செய்துள்ளது. இந்த நிலையில் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க ரஷியா … Read more

2021 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருதை வென்றார் பி.வி.சிந்து

தெலுங்கானா,   உலக பாட்மிண்டன் தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவர் இந்தியாவின் பி.வி.சிந்து. இவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருந்தார். இந்த நிலையில் பாட்மிண்டன் துறையில் இவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக தெலுங்கானா அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும்  சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்  விருது இந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் 'டிரா'

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் ஆண்டனியோ ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் … Read more

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்!

புதுடெல்லி, 10 அணிகள் கொண்ட 15-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.  இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பஞ்சாப் … Read more