புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 82 குடிநீர் திட்டங்களை சீரமைக்க ரூ.149 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல்

சென்னை: புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 82 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதிவழங்கியுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறைச் செயலர்தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடிநீர் வடிகால் வாரியம் மூலம்544 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, 4.53 கோடி பேருக்குபாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஊரகப்பகுதிகளில் உள்ள 1.25 கோடி வீடுகளில், இதுவரை 1.02 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கள் வழங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், … Read more

அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் மாதம் ரூ.1,000 நிதியுதவி

சென்னை: அரசுப் பள்ளி மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் நீட்டித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதன்மூலம் வரும் கல்வி ஆண்டில் 49,664 பேர் பயன்பெறுவர். இதுதொடர்பாக தமிழக அரசின்சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் உயர்கல்வி உறுதி திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றும் … Read more

4 மாநகராட்சி விரைவில் உதயம்: நடைமுறைகளை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள், அருகில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறைகளை தொடங்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகரங்களுக்கு அருகில் உள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட,வேகமாக நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை, … Read more

சென்னை மெட்ரோ பணிகள் – ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர்களால் முன்மொழியப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் இப்பணிகளைக் கருத்தில் கொண்டு, பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது வருகின்ற 16.03.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் … Read more

கிறிஸ்தவர்கள் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: “தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக (இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான்) தமிழக அரசால் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன” என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “இப்புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மதத்தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக நிதியுதவி வழங்கும் திட்டத்தினை ஏற்கனவே … Read more

‘தேர்தல் பத்திரங்களால் அதிக நிதி ஈட்டியது யார்? – அண்ணாமலை ஆவேசம்

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் அண்மையில் பதிவேற்றம் செய்தது. இதில் அரசியல் கட்சிகளில் அதிகபட்சமாக ரூ.6,060.5 கோடியை நிதியாக பெற்றுள்ளது பாஜக. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த சூழலில் இது குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்துள்ளார். “தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக மீது காங்கிரஸ் உட்பட … Read more

கரூர் கோயிலில் அரச மரம், வேப்ப மரத்துக்கு திருமணம் செய்ய தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை: கரூர் கோயிலில் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் இடையே திருமணம் செய்து வைக்க தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கரூர் பஞ்சமாதேவி புதூர் ஸ்ரீ ஆனூர் அம்மன் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் பரம்பரை அறங்காவலர் ராமகிருஷ்ணன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் பஞ்சமாதேவி புதூரில் அருள்மிகு ஆனூர் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அடுத்த வாரம் அரச மரம், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து … Read more

அலெக்ஸ் அப்பாவு முதல் பூங்கோதை ஆலடி அருணா வரை – நெல்லை திமுகவில் எம்பி சீட் யாருக்கு?

திருநெல்வேலி: தமிழகத்திலுள்ள 39 மக்களவை தொகுதிகளிலேயே திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடவே அதிகமான திமுக நிர்வாகிகள் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் வாய்ப்புகள் அதிகமுள்ளவர்கள் குறித்து அக்கட்சி வட்டாரங்களில் தற்போது விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறதது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் திமுகவினர் மனு அளிக்க கட்சி தலைமை அறிவித்து, நேர்காணலையும் நடத்தி முடித்திருக்கிறது. அதில் தமிழகத்திலேயே அதிகமான திமுக நிர்வாகிகள் விருப்பமனு அளித்திருந்த தொகுதி திருநெல்வேலி. இத்தொகுதியில் போட்டியிட மட்டும் 44 திமுக நிர்வாகிகள் … Read more