கங்கனாவின் ட்வீட்டால் சர்ச்சை.. இவரது இயக்கத்தில் நடிக்க விரும்பிய நடிகை.. மேலும் சினிமா செய்திகள் உள்ளே

உதயநிதி படத்தின் டீசர் வெளியீடு கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் அடுத்து இயக்கியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரி, ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், இளவரசன், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனுபவ் சின்ஹா இயக்கத்தில் தயாரான படம் ஆர்ட்டிகல் 15. இந்தப் படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. ஆர்ட்டிகல் 15 படத்தில் முன்னணி பாலிவுட் நடிகரா … Read more

வன்னியர் இடஒதுக்கீடு : விசாரணையை தள்ளிவைக்க வாய்ப்பே இல்லை – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய தமிழகத்தின் பெருங்குடியான வன்னியர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் இன மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, வன்னியர் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக வன்னியர் இட ஒதுக்கீடு … Read more

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத அடையாளத்துடன் செல்லக் கூடாது – நடிகை குஷ்பு கருத்து.! <!– பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத அடையாளத்துடன் செல்லக் கூடாது … –>

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், ஹிஜாப் அணிவது, காவித்துண்டு அணிவது உள்ளிட்ட எந்த மத அடையாளத்துடனும் செல்லக் கூடாது என நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், கல்வி நிலையங்களில் சாதி, மதம் பார்க்கக் கூடாது எனவும், அனைவரும் சமம் எனவும் கூறினார். மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதும், காவி துண்டு அணிவதும் தவறான செயல் எனவும் குஷ்பு கூறினார். Source … Read more

கோபாலபுரம் ஸ்டைலை பேரூராட்சிகளிலும் திமுகவினர் கொண்டுவந்துவிட்டனர்: அண்ணாமலை தாக்கு

விழுப்புரம்: ”கோபாலபுரம் ஸ்டைலை தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுகவினர் கொண்டுவந்துவிட்டனர்” என்று விழுப்புரம் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: “குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்தும், மக்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் இல்லை. ஒவ்வொரு தேர்தலில் பெரிய கட்சி, பெரிய கட்சி என வாக்களித்து வாய்ப்பளித்தும் எவ்வித முன்னேற்றமும் … Read more

ராஜபாளையம்: வெளியூரில் இருந்து துக்க வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு

ராஜபாளையம் அருகே துக்க வீட்டுக்கு வெளியூரில் இருந்து வந்திருந்த பெண், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்தம்மாள். தற்போது திருமணமாகி தனது கணவர் மாரிமுத்துவுடன் கரூரில் வசித்து வருகிறார். இவர், தனது சகோதரன் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அருகே … Read more

நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமை நம்பிக்கை அளிப்பதாக மத்திய அரசு கூற காரணம் என்ன?

Kaunain Sheriff M  country’s Covid-19 situation ‘optimistic’ : ஓமிக்ரான் மாறுபாட்டால் தூண்டப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலையின் மத்தியில் இந்தியா உள்ளது. நாட்டில் உருவாகும் ஒட்டுமொத்த தொற்றுநோய் நிலைமை நம்பிக்கை அளிப்பதாக அரசாங்கம் வியாழக்கிழமை கூறியது. இருப்பினும், வைரஸால் ஏற்பட இருக்கும் தனித்துவமான சவால்கள் மற்றும் சில மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற மனநிறைவுடன் இருப்ப்பதற்கு எதிராகவும் அது எச்சரிக்கை செய்தது. நல்ல செய்தி … Read more

#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை-தமிழக அரசு.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலன்று ஊழியர்களின் ஊதியம் பிடிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது. இதில், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி … Read more

பசுமாடுகளை ஏற்றி வந்த லாரியை மட்டும் அனுமதியுங்கள் ஐயா.. போலீசாரின் கால்களில் விழுந்து மன்றாடிய விவசாயி.. <!– பசுமாடுகளை ஏற்றி வந்த லாரியை மட்டும் அனுமதியுங்கள் ஐயா.. … –>

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டும் அனுமதிக்குமாறு விவசாயி ஒருவர் போலீசாரின் கால்களில் விழுந்து வேண்டுகோள் விடுத்தார். பண்ணாரி சோதனை சாவடி வழியாக நேற்று மாலை 6 மணியளவில் பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. இரவு நேர போக்குவரத்துத் தடை நேரம் தொடங்கியதாகக் கூறி அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர், இரவு முழுவதும் கால்நடைகள் லாரியில் … Read more

அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது சமூக அநீதி: கி.வீரமணி காட்டம்

சென்னை: “உயர் மருத்துவப் படிப்புத் தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக உயர் மருத்துவப் படிப்பில் சேர்க்கைக்கான கலந்தாய்வை மேற்கொண்டது எப்படி?” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் (super speciality – DM/Mch) அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் … Read more