இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்தால்தான் அதிமுகவை மீட்க முடியும்! டிடிவி தினகரன் பேட்டி!

TTV Dinakaran And O Paneer Selvam Join Hands: இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்தால்தான் அதிமுகவை மீட்க முடியும்! டிடிவி தினகரன் பேட்டியின் பின்னணி தகவல்கள்! 

“பாமக இல்லையெனில் அதிமுக 36 தொகுதிகளில் வென்றிருக்காது” – இபிஎஸ் விமர்சனத்துக்கு அன்புமணி பதில்

சென்னை: “10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிமுக 66 தொகுதிகளை வென்றது. அதிலும் 36 தொகுதிகள் பாமக பங்களிப்பு இல்லை என்றால் வெற்றி பெற்று இருக்காது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “அன்புமணி ராமதாஸ் ஒரு வேடந்தாங்கல் பறவை. அதனால் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறி மாறி கூட்டணி வைக்கிறார்” என்று விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு இன்று பதில் அளித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், … Read more

தேர்தல் களம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் நிறைவு.. மொத்தம் எத்தனை?

Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.  

தமிழகத்தில் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் எழிலன் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில், தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏழு கட்ட வாக்குப்பதிவுக்குப் பின், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் … Read more

தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கும் ஆதிக்க சக்தியோடு தான் எங்களது போட்டி: அண்ணாமலை

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடியிடம் தாக்கல் செய்தார். 

“கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” – சீமான் சாடல்

சென்னை: “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு … Read more

“ஸ்டாலின் யாரை கை நீட்டுகிறாரோ அவரே பிரதமர்” – அமைச்சர் சக்கரபாணி பேச்சு @ கரூர்

கரூர்: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியில் யாரை பார்த்து கை நீட்டுகிறாரோ அவர் தான் இந்திய நாட்டின் பிரதமர். தமிழகத்தில் கடந்த 34 மாதங்களில் ஏராளமான சாதனை திட்டங்களை தமிழக முதல்வர் செய்துள்ளார்.” என்று கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் சக்கரபாணி பேசினார். கரூர் மக்களவை தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜோதிமணி. இவர் இன்று (மார்ச் 27) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் … Read more

ஓபிஎஸ் பெயரில் 5 பேர் போட்டி: வாக்காளர்களை குழப்ப முயற்சி?

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் … Read more

‘பம்பரம்’ கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டி: துரை வைகோ

திருச்சி: பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என்று மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளரின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு மீது இன்று (புதன் … Read more

புனித வெள்ளி, வார இறுதி நாட்களையொட்டி 1,470 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து 1,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மார்ச் 29-ம் தேதி புனித வெள்ளி,30, 31-ம் தேதிகள் வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் … Read more