ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு: கரூரில் சோகம்

கரூர்: கரூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து ராணுவ வீரர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி அருகேயுள்ள பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து பாஸ்கர் (32). இவர் ராணுவ மருத்துவப் பிரிவில் மீரட்டில் பணியாற்றி வந்தார். திருமணமாகி, குழந்தை உள்ளது. ஒரு மாத விடுப்பில் சண்டிகர் மதுரை விரைவு ரயிலில் இன்று (மார்ச் 13) ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கரூர் ரயில் நிலைய சந்திப்பில் ரயில் காலை 11.35 மணிக்கு நின்ற நிலையில் திண்டுக்கல் ரயில் … Read more

உதகையில் உயிரிழந்த வடமாநில தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: உதகையில் கட்டுமான பணியின்போது மண்ணில் புதைந்து உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்விபத்தில், காயமடைந்த மற்றொரு தொழிலாளிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், பாபுஷா லைன் பகுதியில் இன்று மார்ச் 13 முற்பகல் தனியாருக்குச் … Read more

“நடிகை குஷ்பு முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” மாநில மகளிரணி செயலாளர் ப.ராணி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.ராணி பேட்டி  

“திமுகவுக்கு உண்மையை பேசும் தைரியம் கிடையாது” – குஷ்பு காட்டம் @ உரிமைத் தொகை

சென்னை: “பெண்களை கேவலப்படுத்துவது, அவதூறாக பேசுவது, பெண் குறித்து தவறான விஷயங்களைப் பரப்புவது, இது திமுகவின் டிஎன்ஏ. குஷ்புவின் டிஎன்ஏ கிடையாது. இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் என்னிடம் காட்டாதீர்கள். நான் தவறு செய்தால், குழந்தையாக இருந்தாலும் கீழே விழுந்து மன்னிப்புக் கேட்பேனே தவிர பயந்து ஓடமாட்டேன்” என்று குஷ்பு கூறியுள்ளார். தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி அண்மையில் பாஜக சார்பில் செங்குன்றம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் … Read more

குஜராத் துறைமுகத்திலிருந்து தான் போதைப் பொருட்கள் வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு

மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்

விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிலை: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையிலிருந்து விக்கிரவாண்டி- கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சென்னையிலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி,நெய்வேலி கும்பகோணம் வழியாக செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு, நான்கு வழி சாலையாக மாற்றும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இன்னும் … Read more

பைக் வைத்திருப்பவர்கள் உஷார்! இந்த மாடல் பைக் தான் அதிகம் திருடு போகிறதாம்!

திருடர்களை கூப்பிடும் R15, duke, Dio பைக்குகள்… சென்னையில் நடைபெற்றும் பைக் திருட்டால் அதிர்ச்சியில் இளசுகள்… லட்சங்களை நொடியில் லவட்டிக்கொண்டு செல்லும் விநோத திருடர்கள்!  

அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணிப் பேச்சு – ஒரு தொகுதி கேட்பதாக தகவல்

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி இணைந்து போட்டியிடுவது தொடர்பாக அக்கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் புதன்கிழமை அதிமுக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மக்களவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் … Read more

தன்னை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள சரத்குமார்!

பாஜக கட்சியுடன் தனது கட்சியை இணைத்த சரத்குமாரை வளரும் கிண்டல் செய்து வந்த நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ளார் சரத்குமார்.  

உதகை | கட்டுமான பணியின்போது மண்ணில் புதைந்த வடமாநில தொழிலாளிகள் – ஒருவர் பலி

உதகை: உதகையில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்ததில், இரு வடமாநில தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர். இருவரும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான பகுதிகளில் கட்டுமானப் பணிகள் மலைச் சரிவுகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கட்டுமான பணிகளுக்காக தடுப்பு சுவர் கட்டும்போது அல்லது பள்ளம் தோண்டுபோது மண் சரிந்து விழுந்து அதில், தொழிலாளர்கள் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், உதகை அருகேயுள்ள … Read more