கூட்டணிக் கட்சிக்காக விருதுநகரை விட்டுக்கொடுத்த பிரதான கட்சிகள்: களத்தில் கடும் போட்டி

விருதுநகர்: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் விருதுநகர் தொகுதியை கூட்டணிக் கட்சிக்காக கொடுத்துள்ளன. பாஜகவும் சமகவிலிருந்து வந்த நடிகை ராதிகாவை களமிறக்கியுள்ளது. இதனால், தேர்தல் களத்தில் கடும் போட்டியில் வேட்பாளர்கள் இறக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதிகளில் விருதுநகர், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளை திமுகவும், சாத்தூரை … Read more

கிரஷர் உரிமையாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை @ ஓசூர்

ஓசூர்: ஓசூரில் கிரஷர் உரிமையாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையில் நகை, பணம் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜலகண்டேஸ்வரர் நகரைச் சேர்ந்த லோகேஷ்குமார் இவர் கடந்த 28-ம் தேதி கர்நாடகாவிலிருந்து ஓசூருக்கு காரில் வரும்போது, ஜூஜூவாடி சோதனை சாவடியில் பறக்கும்படையினர் அவரின் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.10 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வருமான … Read more

புதுச்சேரி: கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும்போது சுவர் இடிந்து விழுந்து மூவர் பலி

புதுச்சேரி: புதுச்சேரி மரப்பாலத்தில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது மின்துறை அலுவலக சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மரப்பாலம் மின்துறை அலுவலகம் பின்புறம் வசந்தம் நகர் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் வாயக்கால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மின்துறை அலுவலகத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது. இப்பணியில் அரியலூர் மாவட்டம் நெட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், பாலமுருகன், ஆரோக்கியராஜ் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு | ஸ்டாலின் உத்தரவாதம் என்னவானது? – ராதமாதாஸ் கேள்வி

உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியும் கூட வன்னியர்களுக்கு வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கும் நீங்கள் சமூக நீதி பற்றி பேசலாமா? அவ்வாறு பேசுவது சமூகநீதிக்கே இழுக்கு அல்லவா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் … Read more

ஆ.ராசாவின் வாகன சோதனையில் மெத்தனம் – பறக்கும் படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவின் வாகனத்தை சோதனையிடுவதில் மெத்தனமாக செயல்பட்ட பறக்கும் படை பெண் அதிகாரி கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குன்னூர் – கேரளா இடையிலான இரு மாநில எல்லை வாகன சோதனைச் சாவடியில் கடந்த மார்ச் 25-ம் தேதி ஆ.ராசாவின் காரை மறித்து, அதிகாரி கீதா தலைமையிலான பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை முறையாக செய்யவில்லை. மேலோட்டமாக செய்யப்பட்டது என புகார்கள் எழுந்தன. அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக … Read more

சதுரங்க வேட்டை பட பாணியில் ஆட்சி நடத்துகிறார் மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami criticized Tamil Nadu Chief Minister M.K.Stalin in Cuddalore: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சதுரங்க வேட்டை பட பாணியில் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அனைத்து உயிர்களிடமும் அன்பை வலியுறுத்தும் ஈஸ்டர் பண்டிகை: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஈஸ்டர் பண்டிகையை அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டுவதை வலியுறுத்தும் திருநாள்என தெரிவித்துள்ளனர். புனித வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தியஇயேசு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த திருநாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இன்று (மார்ச் 31) ஈஸ்டர் பண்டிகைகொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள் வருமாறு: பாமக நிறுவனர் … Read more

பிரதமர் மோடிக்கு மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை: முதல்வருக்கு அண்ணாமலை பதில்

சென்னை: மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கு இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தாய்மொழியாக தமிழ் எனக்குகிடைக்காதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியதைமுதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 70 ஆண்டுகளாக, தமிழ் மொழியை வியாபாரமாக்கி தமிழகத்தைச் சுரண்டிய திமுகவின் தமிழுணர்வு நாடகத்தை, தமிழக மக்கள் இனியும் நம்புவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நினைப்பாரேயானால், அவருக்கு ஏமாற் … Read more

பாஜகவில் இருக்கும் ரவுடிகளை பட்டியல் போட்டு விளாசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

M. K. Stalin, Salem, Lok Sabha election campaign: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் பேசும்போது, சரித்திர பதிவேடு ரவுடிகளை எல்லாம் கட்சியில் சேர்த்து கொண்டிருக்கும் பாஜக தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட 30% அதிகம் விற்பனையானால் விசாரணை

புதுக்கோட்டை: மக்களவைத் தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வழக்கத்தைவிட 30 சதவீதத்துக்கும் மேல் மதுபானங்கள் விற்பனையாகும் கடைகளில், டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, வாகனங்களில் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள், ரொக்கம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கூட்டங்களையும், தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளின் விற்பனையைக் கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். … Read more