‘டெல்டா’வை வளைப்பது யார் யார்? – 6 தொகுதிகளின் கள நிலவர அலசல்

தமிழக மக்களவைத் தொகுதிகளில் ‘டெல்டா பகுதி’யில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளில் எந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது என்பதை விரிவாக இந்தத் தொகுப்பில் பார்ப்போம். கடலூர் : கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.கே.விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பாக சிவக்கொழுந்து களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பாக தங்கர்பச்சான் மற்றும் நாதக சார்பாக வே.மணிவாசகன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். … Read more

திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு தைரியம் இருக்கா: பிரேமலதா விஜயகாந்த்

ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி திமுக செய்த ஊழலை ஸ்டாலின் இடம் கேட்க தைரியம் இருக்கா என்று பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பாஜகவும் அதிமுகவும் தேர்தலுக்குப் பிறகு கைகோக்கும்” – முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: “ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக் கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கருத்துக் கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்” என்று திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம், … Read more

பணப்பட்டுவாடா செய்கிறீர்களா… திமுக கவுன்சிலரை கேள்விகளால் துளைத்த பாமக வேட்பாளர் திலகபாமா

PMK Lok Sabha Candidate Thilagabama Campaign in Dindigul: திண்டுக்கல்லில் பூத் ஸ்லிப் வழங்கிய 16 வது வார்டு திமுக கவுன்சிலர் சேகரை , பூத் ஸ்லிப் நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள் , அப்படி என்றால் பணப்பட்டுவாடா செய்கிறீர்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் பாமக வேட்பாளர் திலக பாமா 

“ஏழைகளை ஏமாற்றும் இத் தேர்தலை புறக்கணிக்க தயார்” – புதுச்சேரி அதிமுக வேட்பாளர் ஆவேசம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். பணப் பட்டுவாடா குறித்து புகார் தந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் இன்று (ஏப்.18) கூறியதாவது: “ஒரு இளைஞனாக வாக்குக்கு பணம் தரக்கூடாது என்று அதிமுக சார்பில் இந்தத் தேர்தலில் களமிறங்கி களத்தில் உள்ளேன். நாங்கள் வாக்குக்கு பணம் தர மாட்டோம் என … Read more

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு?

Mansoor Ali Khan : வேலூர் மாவட்டம். நடிகரும் வேட்பாளரமான மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதி   

நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: நாளை ஐகோர்ட் விசாரணை

சென்னை: “திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்”” என்று கோரிய மனுவை நாளை (ஏப்.18) விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிப்பட்டது தொடர்பாக பாஜக … Read more

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?

 Sivaganga Lok Sabha Constituency Prediction 2024: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

“பாஜக தேர்தல் அறிக்கை 3 மணி நேரத்திலேயே புதைந்து விட்டது” – ப.சிதம்பரம் கருத்து

சிவகங்கை: ‘‘பாஜக தேர்தல் அறிக்கை 3 மணி நேரத்திலேயே புதைந்து விட்டது’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில், அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை தொகுதியில் விநோதமான போட்டி நிலவுகிறது. எதிர ணியில் நிற்கும் 2 வேட்பாளர்கள் சுற்றுலாப் பயணிகள் போல் வந்துள்ளனர். தமிழ் மண்ணுக்கு சம்பந்தம் இல்லாதவர், தொகு திக்குள் செல்ல பாதை கூட தெரியா தவர் பாஜகவில் நிற்கிறார். அவர் சிவகங்கை தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். … Read more

“குக்கர் சின்னமே தேயும் அளவுக்கு வாக்களிப்பீர்” – தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம்

பாஜக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது மனைவி அனுராதா நேற்று பிரச்சாரம் செய்தார். சின்னமனூர் அருகே மேல்மணலாறு, மேகமலை, ஹைவேவிஸ் உள்ளிட்ட மலைகிராமப் பகுதிகளில் அவர் பேசியதாவது: 14 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தபோதும், உங்களின் பாசம் மாறவில்லை. என் கணவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. ஆர்.கே.நகரில் பெரிய கட்சிகளை எதிர்த்து என் கணவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற சின்னம்தான் குக்கர். அங்கு … Read more