“மலைவாழ் மக்கள் முன்னேற்றம், கல்விக்கு பாடுபடுவேன்” – நாம் தமிழர் வேட்பாளர் வீரப்பன் மகள்

கிருஷ்ணகிரி: “நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ்மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என நாம தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளரும், வீரப்பனின் மகளுமான வித்யாராணி கூறினார். கிருஷ்ணகிரியில் இன்று (மார்ச் 24) மாலை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யாராணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்தேன். அந்தக் கட்சியிலும் மனநிறைவுடன் பணியாற்றினேன். ஆனால் கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக நான் பெரிய அளவில் செயல்படவில்லை. ‘கூச முனிசாமி … Read more

ஓபிஎஸ் போட்டியால் நட்சத்திர தொகுதியான ராமநாதபுரம் களம் எப்படி?

ராமநாதபுரம்: பாஜக கூட்டணியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட உள்ளதால், ராமநாதபுரம் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வாரணாசியில் வெற்றி பெற்று பிரதமரான மோடி, இந்த தேர்தலில் ராமேசுவரத்தை உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என, கடந்த ஓராண்டாக செய்திகள் பரவின. இதை பாஜகவினரும் அவ்வப்போது உறுதிபடுத்திக்கொண்டே இருந்தனர். அதனால், ராமநாதபுரம் தொகுதி விஐபி அந்தஸ்தை எட்டும் நிலையில் இருந்தது. ராமநாதபுரம் தொகுதி மக்களும் பிரதமர் மோடி போட்டியிட உள்ளார் என்ற … Read more

‘யாருக்கு உங்கள் வாக்கு’ அழைப்புகளால் கோவை தொகுதி மக்கள் அவதி

திருப்பூர்: அலைபேசிகளில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என வரும் பதிவு செய்யப்பட்ட அழைப்புகளால், பல்வேறு தரப்பு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவும் சூழலில், ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என அலைபேசிக்கு வரும் பதிவு செய்யப்பட்ட கணினி அழைப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட … Read more

’தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றால்..’ தேனி மக்களுக்கு உதயநிதி கொடுத்த புதிய வாக்குறுதி!

Minister Udayanidhi Stalin: தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அப்பகுதி மக்களுக்கு புதிய வாக்குறுதி ஒன்றை கொடுத்துள்ளார்.

சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் @ நாமக்கல்

நாமக்கல்: மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படுவர். தவிர, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனவே … Read more

தூத்துக்குடி போராட்டம்: தங்கு கடல் மீன்பிடித் தொழில் செய்ய அனுமதி வேண்டும், மீனவர்கள் கோரிக்கை

தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை: தங்களுக்கு தங்கு கடல் மீன்பிடித் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29 முதல் கமல் பிரச்சாரம் : மநீம அறிவிப்பு

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரும் மார்ச் 29-ம் தேதி ஈரோட்டில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ளது . எனினும், மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தநிலையில், … Read more

’பிச்சை எடுத்து ஒரு சீட்டு வாங்கணுமா’ ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த ஆர்பி உதயகுமார்

ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய ஆர்பி உதயகுமார், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ’பிச்சை எடுத்து ஒரு சீட்டு வாங்கணுமா.. இதெல்லாம் ஒரு பொழப்பு’ என கடுமையாக விமர்சித்தார்.

''ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்'' – எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் வீடியோ

சென்னை: “வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மையான அறிக்கையை அளித்த பெருமிதத்துடன், உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சியில் இருந்து மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். முன்னதாக இன்று காலை சேலத்தில், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அந்தப் பகுதியில் நடந்துசென்று வாக்கு சேகரித்தார். இந்நிலையில், தனது பிரச்சாரப் … Read more

மதிமுக சிட்டிங் எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி…? அரசியல் களத்தில் அதிர்ச்சி

Erode MP Suicide Attempt: தற்போதைய மதிமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவர் தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.