புதுச்சேரி துணை நிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை இரவு ராஜ்நிவாஸில் பதவியேற்கிறார். புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் பொறுப்பை, தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை வகித்து வந்தார். அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்து தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். தமிழிசைக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி மாநிலத் துணை நிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தெலங்கானா ஆளுநராக நேற்று அவர் பொறுப்பேற்றார். அதையடுத்து, புதுச்சேரிக்கு நாளை … Read more

அண்ணாமலை ஓர் பொய் புழுகி: அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்…!

Tamil Nadu News: அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன? பாராளுமன்ற தேர்தல் என்றால் என்னவென்று தெரியாது: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் 

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அறிவிப்பு

உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் த.லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீலகிரி (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் த.லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சபாநாயகர் ப.தனபால் இவரது தந்தை. லோகேஷ் தமிழ்செல்வன் முதன்முறையாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். பி.காம் எம்பிஏ படித்துள்ளார். இவர் அதிமுக ஐடி பிரிவு அவிநாசி … Read more

பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன அதிமுக! புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மறுத்துவிட்ட நிலையில் புதுக்கோட்டையில் இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.

ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு அதிமுகவில் சீட்: நெல்லையில் போட்டி

சென்னை: திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். மக்களவை தேர்தலில் அவருக்கு நெல்லை தொகுதியில் சீட் வழங்கி அதிமுக அறிவித்துள்ளது. யார் இந்த சிம்லா முத்துச்சோழன்?: திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் (35). கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இவரது … Read more

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நெல்லையில் சிம்லா முத்துச்சோழன்!

அதிமுக சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் அஇஅதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக – அதிமுக இடையே 18 இடங்களில் நேரடி மோதல்

தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீதியுள்ள 19 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக தங்கள் கட்சி வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளது. திமுக 21 தொகுதிகளிலும், அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட்டாலும், இந்த 2 கட்சிகளும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதிக் கொள்கின்றன. நேரடி போட்டி நிலவும் தொகுதிகள் … Read more

CSK Vs RCB மேட்ச் பார்க்க செல்பவர்களுக்கு ஸ்பெஷல் சலுகை! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு!

IPL 2024 CSK Vs RCB TN Department Of Transport Announces Free Bus : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளைக் காண வருபவர்கள், ஆன்லைன் டிக்கெட்டை  காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி – சிறு குறிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஈஸ்வரசாமி ( 48 ) அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி ஊராட்சி கருப்புசாமி புதூரை பூர்வீகமாக கொண்டவர் கே.ஈஸ்வரசாமி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளனர். மனைவி லதாபிரியா மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக உள்ளார். கே.ஈஸ்வரசாமி பத்தாம் வகுப்பு வரை பயின்றுள்ளார். திமுகவில் ஒன்றிய பிரதிநிதி, ஒன்றிய பொருளாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து தற்போது மடத்துக்குளம் மேற்கு … Read more

ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவுமே செய்யாத ஒரே முதல்வர் எடப்பாடி: கனிமொழி

மக்களுக்கு எதிரான பாஜக கொண்டுவந்த அத்தனை மசோதாக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்டு அதற்காக அது வெற்றி பெறுவதற்காக வாக்களித்த இயக்கம் தான் அதிமுக என்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.