அமெரிக்க அதிபர் தேர்தல்; பின்வாங்கும் நிக்கி ஹாலே – குடியரசு கட்சி வேட்பாளராகும் வாய்ப்பை பெறுவாரா டிரம்ப்?

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதை முடிவு செய்வதற்காக அக்கட்சி சார்பில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்குகளை பெரும் நபர் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். இதில் டொனால்ட் டிரம்ப், நிக்கி … Read more

நேபாளம்; ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

காத்மண்டு, நேபாள நாட்டில் பஸ் ஒன்று, தலைநகர் காத்மண்டுவை நோக்கி இன்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 48 பேர் பயணம் செய்தனர். அப்போது, தடிங் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில், பஸ்சானது திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினார்கள். அவர்களை காப்பாற்ற அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடினர். இந்த நிலையில், ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் பயணிகள் பலரும் … Read more

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகல்

வாஷிங்டன்: குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகி உள்ளார். இதன் மூலம் அக்கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் நவம்பர் வாக்கில் நிறைவடைய உள்ளது. இந்த சூழலில் அந்த நாட்டின் பிரதான கட்சியாக உள்ள குடியரசுக் … Read more

Taiwanese minister regrets racist comments against Indians | இந்தியர்கள் மீது இனவெறி கருத்து தைவான் அமைச்சர் வருத்தம்

பீஜிங், இந்திய தொழிலாளர்கள் குறித்து இனவெறி மற்றும் பாகுபாட்டை துாண்டும் வகையில் தெரிவித்த தன் கருத்துக்கு, தைவான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். கிழக்காசிய நாடான தைவானில், பல்வேறு துறைகளில் தொழிலாளர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைப் போக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பணியாற்ற தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயம் இதுதொடர்பாக அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சூ மிங்சுன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “தைவான் தொழிலாளர் துறை, … Read more

முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: ரூ.25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பர்க்

வாஷிங்டன், 2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது. தற்போது மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். நேற்று உலகெங்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் … Read more

US presidential candidate election: Nikki Haley withdrawal? | அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் : நிக்கி ஹாலே விலகல் ?

சார்லஸ்டன் : அமெரிக்காவில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து நிக்கி ஹாலே விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்கிறது. இதற்காக கட்சிகளின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மாகாணங்கள் வாரியாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக தெற்கு கரோலினா முன்னாள் கவர்னரான, இந்திய – அமெரிக்கர் நிக்கி ஹாலேவும், அதே கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தனது சொந்த … Read more

போர்க் கைதிகளுக்கு பாலியல் வன்கொடுமை! நாயை விட்டு கடிக்க வைத்த இஸ்ரேல்! UNRWA புகார்

War Crimes Update From UNRWA : பாலஸ்தீனியர்களை தங்களது காவலில் இஸ்ரேல் கொடூரமான துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கியதாக UNRWA குற்றம் சாட்டுகிறது..

நிலவில் அணு உலையை நிறுவ திட்டமிடும் ரஷ்யா சீனா..!!

மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நிலவில் அணு உலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் ஆலோசித்து வருவதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது. 

உக்ரைன் போரில் ஈடுபட நிர்பந்திக்கப்படும் தங்களை காக்குமாறு ரஷ்யாவில் உள்ள 7 இந்தியர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை

புதுடெல்லி: ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற தாங்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராக போரிட நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 7 இளைஞர்கள், தங்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ககன்தீப் சிங் (24), லவ்பரீத் சிங் (24), நரேன் சிங் (22), குர்பிரீத் சிங் (21), குர்பிரீத் சிங் (23), ஹர்ஷ் குமார் (20), மற்றும் அபிஷேக் குமார் (21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் … Read more

பாகிஸ்தானின் 24-வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: பாகிஸ்தானின் 24-வது பிரதமராக பொறுப்பேற்றள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். பாகிஸ்தான் முஸ்லிம் – நவாஸ் கட்சித் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை அவர் பதவி ஏற்றார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் ‘‘பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு வாழ்த்துகள்’’ என கூறப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக … Read more