காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை

புதுச்சேரி: காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளனர். உதவி பதிவாளர் அலுவலம் மீது புகார்கள் வந்ததை அடுத்து சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் கலாஷேத்ரா மாணவிகளின் போராட்டம் வாபஸ்

சென்னை: கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகளின் போராட்டம் வாபஸ் பெற்றனர். பேராசிரியர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி மாணவிகள் போராட்டம் நடத்தினர். பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உறுதி அளித்ததால் வாபஸ் பெற்றுள்ளனர்.

ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு குறித்து சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்க டெல்லி கோர்ட் மறுத்துவிட்டது.

கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோவை: கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் ஜூன் 25 வரை கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். தினமும் காலை 7.10-க்கு இயக்கப்படும் ரயில் தவிர உதகைக்கு மேலும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. … Read more

சென்னை அருகே மதுரவாயிலில் பட்டாசுகளை நாட்டு வெடிகுண்டு போல் வெடிக்க வைத்த 4 பேர் கைது

சென்னை: சென்னை அருகே மதுரவாயிலில் பட்டாசுகளை ஒன்றாக ஒட்டி நாட்டு வெடிகுண்டு போல் வெடிக்க வைத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டு வெடிகுண்டு வெடித்தது போன்று மக்களை அச்சுறுத்தியதால் அசோக், சுரேஷ்குமார், இளங்கோ, விஜய் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புன்னமடை காயல் கரையோரத்தில் பிரமாண்ட ஏற்பாடு

கேரளா: கேரளாவில் நாளை வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வைக்கம் நூற்றாண்டு விழா நாளை கேரள அரசு சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கேரள முதலமைச்சருடன் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். புன்னமடை காயல் கரையோரத்தில் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு சார்பில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். இரு மாநில முதலமைச்சர்களும் விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் போலீஸ் … Read more

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக வேலூர் கோட்டையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறை சோதனை

வேலூர்: ஹிஜாப் விவகாரம் தொடர்பாக வேலூர் கோட்டையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறை சோதனை நடத்தினர். இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்றசொல்லி வீடியோ எடுத்த விவகாரத்தில் 7 பேர் கைதான நிலையில் சோதனை நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கம் காவல் நிலையம் அருகே காரில் கடத்தப்பட்ட 81 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கம் காவல் நிலையம் அருகே காரில் கடத்தப்பட்ட 81 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மராட்டியத்தை சேர்ந்த சங்கர் தசரத் பவார் என்பவரிடம் இருந்து ரூ.48 லட்சம் மதிப்புள்ள 81 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளா மூணாறு அருகே அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்கக்கோரி 2-ம் நாளாக பொதுமக்கள் போராட்டம்

கேரளா: மூணாறு அருகே அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்கக்கோரி 2-ம் நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூணாறு அருகே சுற்றி திரியும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க கேரளா ஐகோர்ட் தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னகானல் பஞ்சாயத்துக்குட்பட்ட சிங்குகண்டம் பகுதியில் சாலையோரத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு

கோவை: கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.  கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் ஜூன் 25 வரை கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். தினமும் காலை 7.10க்கு இயக்கப்படும் ரயில் தவிர உதகைக்கு மேலும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.