Shalu Shammu: படு ஆபாசமாக கேள்வி கேட்ட நபர்: அசராமல் ஷாலு ஷம்மு கொடுத்த பதிலடி.!

சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சண்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இந்தப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பல படங்களில் நடித்துள்ள ஷாலு ஷம்மு நெட்டிசனின் அநாகரிகமான கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடத்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இந்தப்படத்தில் சூரி ஜோடியாக நடித்தவர் தான் ஷாலு ஷம்மு. இந்தப்படத்தை தொடர்ந்து … Read more

கர்நாடகாவுல சிங்கம் மாறி இருந்தாரு.. இங்க அசிங்கம் பண்ணிட்டு இருக்காரு.. அண்ணாமலையை தாக்கிய சீமான்

சென்னை: “கர்நாடகாவில் சிங்கம் மாதிரி இருந்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் அசிங்கம் செய்து கொண்டு இருக்கிறார்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழக பாஜகவினர் கூறி வருகின்றனர். இதனிடையே, நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று சீமான் பகிரங்கமாக அறிவித்தார். சீமானின் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் … Read more

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்: முடியவே, முடியாது – விடாப்பிடி கர்நாடக அரசு! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை காவிரி தற மறுக்கிறது என்ற தமிழக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக நீரை தமிழ்நாட்டுக்கு கொடுத்துவிட்டதாக கர்நாடக துணை முதல்வரும், நீர் வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர் டெல்டா விவசாயிகள். காவிரி நீர் எட்டிப்பார்க்காததால் பயிர்களை காய்வதை பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர். தென்மேற்கு பருவமழை போதிய … Read more

'ஜெயிலர்' படத்தின் வசூல் வேட்டை: ரஜினியை தொடர்ந்து நெல்சனுக்கு கிடைத்த பரிசு.!

‘ஜெயிலர்’ வெற்றிக்கு ரஜினிக்கு பரிசளித்ததை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமாரை சந்தித்து காசோலை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ரஜினிக்கு கிடைத்த பரிசு’ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் குதுலம் ஆகியுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிக்கு காசோலையும், காரும் பரிசாக அளித்துள்ளது தான் சோஷியல் மீடியா முழுக்க ஒரே பேச்சாக உள்ளது. BMW i7 மற்றும் BMW X7 காரை காண்பித்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தேர்ந்தெடுக்க சொல்ல, ரஜினியும் BMW X7 காரை சாய்ஸ் செய்துள்ளார். … Read more

ADITYA-L1 குறித்து அறிந்து கொள்ள வேண்டிய 6 வியப்பூட்டும் உண்மைகள்! சூரியனுக்கே தண்ணி காட்டப்போகும் ஆராய்ச்சி!

சமீபத்தில் நிலவில் கால்பதித்த சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியால் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இந்நிலையில் நிலவுக்கான தன்னுடைய வெற்றிப்பயணத்தை தொடர்ந்து சூரியனை ஆராய நாளை (செப்டம்பர் 2) ஆதித்யாயன் என்ற விண்கலத்தை ஏவ உள்ளது இஸ்ரோ. அதற்கான கவுன்டடௌன் இன்றிலிருந்து தொடங்கவும் பட்டுள்ளது. இந்த சூரிய பயணம் குறித்து அதன் சுவாரஸ்யமான தகவல்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். ​ஆதித்யா எல்-1 விண்கலம்சூரியனை விண்வெளியில் L1 … Read more

விஜயலட்சுமி விவகாரம்.. "நீங்க ரொம்ப ரசிக்கிறீங்களே ஏன்".. நான் புகார் தரட்டுமா..? சீமான் ஆவேசம்

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக நிருபர்கள் கேள்வியெழுப்பிய போது சீமான் சற்று ஆவேசமாக பதிலளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக தனது புகாரில் அவர் கூறியிருக்கிறார். இதுவரை பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் சீமானை திட்டியும், ஆபாசமாக பேசியும் … Read more

"ஆட்டம் ஆரம்பம்".. இறுதியானது 'இந்தியா' கூட்டணி.. ஓரணியில் திரண்ட 13 கட்சிகள்.. 'மாஸ்' தீர்மானங்கள்

டெல்லி: மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணி சார்பில் இன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என 28 கட்சிகளும் ஓரணியில் திரண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தங்கள் கூட்டணிக்கான முழக்கத்தையும் அவை அறிவித்துள்ளன. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 10 ஆண்டுகள் நிறைவேற உள்ள நிலையில், அடுத்த ஆண்டு … Read more

Thani Oruvan 2: 'தனி ஒருவன் 2' படத்தின் வில்லன் இந்த நடிகரா.?: நடந்தா நல்லாருக்கும்.!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ‘தனி ஒருவன்’. நீண்ட காலமாகவே இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்திருந்தனர். எட்டு ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு ‘தனி ஒருவன் 2’ படம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. ஜெயம் ரவி அவரது அண்ணன் மோகன்ராஜ் கூட்டணியில் உருவான படம் ‘தனி ஒருவன்’. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான … Read more

Samsung Galaxy A05 : MediaTek ப்ராசஸர், 4GB ரேம் என சாம்சங்கின் அடுத்த என்ட்ரி-லெவல் மொபைல்! இணையத்தில் லீக் ஆன டிசைன்!

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக விரைவில் வெளியாக இருக்கும் Galaxy A05 மொபைலின் படம் மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் Google Play Console பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான சாம்சங் A04 – ஐ தொடர்ந்து அதன் என்ட்ரி-லெவல் மொபைலான Samsung A05 – ஐ இந்தாண்டு இறுதியில் வெளியிட சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் அதன் டிசைன் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். ​Galaxy … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: முந்திக் கொண்ட எடப்பாடி – உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

அதிமுக பொதுக்குழு 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கூடியது. அப்போது ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் சட்டப் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. அதன் பின்னர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக … Read more