உலகின் பணக்கார நாடான சுவிஸின் நகரம் ஒன்றில் உணவுக்காக வரிசையில் நிற்கும் ஆயிரக்கணக்கானோர்!

ஜெனீவாவில் இன்னமும் வாரந்தோறும் ஆயிரக்கணக்கானோர் உணவுக்காக வரிசையில் நிற்பதைக் காணமுடிகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கானோர் இலவச உணவுக்காக ஜெனீவாவில் வரிசையில் நிற்பது வழக்கமான ஒரு காட்சியாகவே மாறிவிட்டது. உலகம் பணக்கார நாடு என அண்ணாந்து பார்க்கும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், இப்போதும் பல ஆவணப்படுத்தப்படாத பணியாளர்கள் ஊரடங்கால் தங்கள் வேலைகளை இழந்ததால் உணவுக்கே கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதுவரை சில தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு இலவச உணவுப்பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் வழங்கிவந்தன. ஆனால், கூட்டம் குறைவது போல் இல்லை. … Read moreஉலகின் பணக்கார நாடான சுவிஸின் நகரம் ஒன்றில் உணவுக்காக வரிசையில் நிற்கும் ஆயிரக்கணக்கானோர்!

வெளிநாடு ஒன்று இலங்கை பொதுப்போக்குவரத்து சேவை ஊழியர்களுக்கு அளித்துள்ள நன்கொடை!

நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பவுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து சேவை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பெருமளவு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை சீனா நன்கொடையா வழங்கியிருக்கிறது. கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (8) வழமைக்குத் திரும்புகின்றது. இதன்போது பொதுப்போக்குவரத்து சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் போக்குவரத்து அமைச்சினால் முன்னெடுக்கட்டு வருகின்றன. அந்தவகையில் நாட்டின் பொதுப்போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பை … Read moreவெளிநாடு ஒன்று இலங்கை பொதுப்போக்குவரத்து சேவை ஊழியர்களுக்கு அளித்துள்ள நன்கொடை!

மிஹிந்தலை மின்னொளி பூஜையை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

மாபெரும் தேசிய பொசன் நிகழ்வுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மிஹிந்தலை மின்னொளி பூஜையின் இரண்டாவது நாள் நிகழ்வினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (05) ஆரம்பித்து வைத்தார். லேக்ஹவுஸ் நிறுவனத்தினதும் இலங்கை மின்சார சபையினதும் இணை அனுசரணையில் 58வது தடவையாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்று நிகாயக்களினதும் மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக தேரர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் புனித தந்தத்தை வழிப்பட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார். இன்று அனுஷ்டிக்கப்படும் “உலக சுற்றாடல் தினத்தை” … Read moreமிஹிந்தலை மின்னொளி பூஜையை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறித்து பலரும் கவனம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அமைதியை கடைபிடித்து வருகின்றமை குறித்து பலரும் கவனம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமைதியான சந்திரிக்கா, ஹொரகொல்லவில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டில் கொரோனா அச்சம் நிலவுகின்ற நிலையில் வைரஸ் தொற்றில் இருந்து தப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் கடைபிடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொரோனா பரவல் காரணமாக அவர் சில மாதங்களாக கொழும்பில் உள்ள தனது … Read moreமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறித்து பலரும் கவனம்

இராஜதந்திரிகளுக்கான பி.சி.ஆர். பரிசோதனை- தனிமைப்படுத்தல் குறித்த திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள்

இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகளுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்த திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களை வெளியுறுகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

தேர்தல் எப்போது? திங்கள் முடிவு

பொதுத் தேர்தலுக்கான திகதியை வரும் திங்கட்கிழமை கூடி தீர்மானிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வங்கக்கடல் – அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50கி.மீ வேகத்தில் வீசுகின்றது. இதனால் மீனவர்கள் இன்றும், நாளை தென் கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கiயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், … Read moreவங்கக்கடல் – அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மீனவர்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக தலைமன்னாருக்கு வர உதவிய 6 பேர் கைது

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தலைமன்னாருக்கு இருவரை அழைத்து வந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாருக்கு தனது பிள்ளையுடன் வந்த நபர் ஒருவர் மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார். இதனையடுத்து குறித்த இருவரும் கடந்த செவ்வாய் மாலை மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் குறித்த நபர் எவ்வாறு மன்னாருக்கு … Read moreஇந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக தலைமன்னாருக்கு வர உதவிய 6 பேர் கைது

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9,851 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9,851 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 273 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2,26,770 ஆக உயர்ந்துள்ளன. மொத்த இறப்பு எண்ணிக்கை 6348 ஆக உயர்ந்து உள்ளது. மீட்பு வீதம் அல்லது மக்கள் குணமடைவதற்கான வாய்ப்புகள் 48.27 சதவீதம் என்று இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் … Read moreஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 9,851 பேருக்கு கொரோனா