செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில் வங்கி அசல் ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் வாதிட அனுமதிக்கக்கோரி செந்தில் … Read more

பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்று (ஏப்.29) தீர்ப்பளித்தது. அப்போது நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், “தண்டனையை குறைத்து வழங்க வேண்டும். மேலும், தங்கள் தரப்பு வாதங்களை தெரிவிக்க, … Read more

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

சென்னை: கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை முன்பு இருக்கும் 70 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு … Read more

“திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை; சமூக நீதியும் இல்லை” – வானதி சீனிவாசன் 

கோவை: “திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை, சமூக நீதியும் இல்லை” என கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், “புதுக்கோட்டை மாவட்டம், சங்கம் விடுதி கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை. சமூக நீதியும் இல்லை. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் காஞ்சிபுரம் மாவட்டம், … Read more

மருந்தாளர் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்த முதியோர் @ புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம்

புதுச்சேரி: புதுச்சேரி – நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளர் (பார்மசிஸ்ட்) இல்லாததால் மாத்திரை வாங்க வந்த முதியோர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பொது மருத்துவம், கண் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த பரிசோதனை, பிரசவம் உள்ளிட்ட பிரவுகள் இயங்கி வருகின்றது. இந்த ஆரம்ப சுகாாதர நிலையம் … Read more

முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயற்சி: பாஜக செயற்குழு உறுப்பினர் கைது

தமிழக முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.

ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் உயரிழப்பு; 34 பேர் படுகாயம்

சேலம்: ஏற்காட்டில் இருந்து சேலம் வந்த தனியார் பேருந்து 11-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 34 பேர் படுகாயமடைந்தனர். கோடை விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ஏற்காட்டுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார், சுற்றுலா வாகனம் மட்டுமின்றி வழக்கமாக ஏற்காட்டுக்கு செல்லும் பேருந்துகளிலும் அதிகளவில் பயணிகள் … Read more

சேலம் ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து – சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி

Bus Accident In Yercaud, Salem Accident News : ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.30: நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை முதல் டி20 உலகக் கோப்பை அணி வரை

பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், “நிர்மலா தேவி படித்தவர் என்பதாலும், அவருக்கு குழந்தைகள் இருப்பதாலும் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் … Read more

தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.