“ஜனநாயகப் பெருவிழா இது!” – சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி

சென்னை: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. முற்பகல் 1 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு … Read more

Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!

Lok Sabha Elections 2024: தங்களின் பல நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததாலும், வேறு சில அதிருப்திகளாலும், தமிழ்நாட்டில் உள்ள சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்

சென்னை: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. முற்பகல் 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக … Read more

கையில் மை வைத்து ஓட்டுப் போட சென்ற மூதாட்டி பலி… உயிரிழப்பு 3 ஆக உயர்வு!

Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்க வந்த மூன்று பேர் வாக்குச்சாவடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காலை 11 மணி நிலவரம்: தமிழகத்தில் 24.37 % வாக்குப்பதிவு – கள்ளக்குறிச்சியில் அதிகம்

சென்னை: தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதம், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடந்தன. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு … Read more

அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்: இபிஎஸ் பேட்டி

மேட்டூர்: அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிலிருந்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை, அவரது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு வந்தார். பின்னர், நெடுங்குளம் ஊராட்சிக் குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர், … Read more

வாக்காளர்கள் கவனத்திற்கு… ஓட்டு போட செல்லும்போது 'இதை' கொண்டு போகாதீர்கள்

Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

“இது உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்” – கே.பி.முனுசாமி கருத்து

கிருஷ்ணகிரி: நடைபெறும் மக்களவைத் தேர்தல் உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே நடக்கின்ற தேர்தல் என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஜின்னா சாலையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இன்று (ஏப்.19) காலை 7.15 மணிக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி எம்எல்ஏ குடும்பத்துடன் வரிசையில் நின்று, வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது: “மக்களவைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் … Read more

வாக்களிக்க போறீங்களா? அப்போ உடனே இந்த விஷயங்களை கவனியுங்கள்

Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் 2024 இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தல்: தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை:தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல் சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி … Read more