“தீவிர மக்கள் பணியாற்றவே விருப்பத்துடன் ராஜினாமா செய்தேன்” – தமிழிசை விளக்கம்

சென்னை: “தீவிரமான மக்கள் பணியாற்றுவதற்காக எனது விருப்பத்தின் பேரில் நான் ராஜினாமா செய்திருக்கிறேன். தெலங்கானா மக்கள் என்மீது காட்டிய அன்புக்கும், புதுச்சேரி மக்கள் என்மீது காட்டிய அபரிமிதமான அன்புக்கும் நான் நன்றி உடையவளாக இருப்பேன்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தீவிரமான மக்கள் பணிக்காகத் திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான், நான் மனமுவந்து ராஜினாமா செய்திருக்கிறேன். … Read more

கோவை: பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடுஷோ! அப்போ நடந்த சுவாரஸ்ய சம்பவம்

Latest Update on Prime Minister Narendra Modi’s Car Rally in Coimbatore: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் ரோடுஷோ நிகழ்ச்சி துவங்கியது. வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு கிருஷ்ணகிரி தொகுதி ஒதுக்கீடு – ஐஸ்கீரிம் வழங்கி கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி: திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் பொதுமக்களுக்கு ஐஸ்கீரிம் கொடுத்தும், பட்டாசுக்கள் வெடித்தும் கொண்டாடினர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியானது. இதில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி 5 … Read more

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நெறிமுறை குறித்து ஆலோசனை: கூடுதல் தலைமை செயலர்

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணனுடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் தொகுதியில் கே.சுப்புராயனும், நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை.செல்வராஜும் போட்டியிடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது பொய் பேசுகிறார். சென்னை, தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் மிதந்தபோது பிரதமர் மோடி வரவில்லை. மேலும், இன்று வரை நிவாரண … Read more

திமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ, துரை வைகோவை திருச்சி வேட்பாளராக அறிவித்தார்

மதிமுக வேட்பாளராக திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ போட்டியிடுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.  

கோவை உள்பட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெல்லும்: அண்ணாமலை நம்பிக்கை

கோவை: மக்களவை தேர்தலில் கோவை உள்பட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் பிரதமர் ரோட் ஷோ நிறைவு பெறும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “மக்களவைத் தேர்தலில் கோவை உள்பட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ‘ரோட் ஷோ’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது இதுவே முதல்முறை. பிரதமர் நிகழ்ச்சிக்கு தமிழக … Read more

O Panneerselvam : அதிமுக சின்னம், கொடியை ஓ.பி.எஸ் பயன்படுத்தக்கூடாது – நீதிமன்றம் தீர்ப்பு

ADMK Name Flag Symbol Permanently Ban For O Panneerselvam : ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  

கூட்டணிக் கட்சிகளோடு தொகுதி பங்கீடு நிறைவு: திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவுபெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய இரு கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டன. மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள்: திருவள்ளூர் (தனி) கடலூர் மயிலாடுதுறை சிவகங்கை திருநெல்வேலி கிருஷ்ணகிரி கரூர் விருதுநகர் கன்னியாகுமரி புதுச்சேரி திமுக கூட்டணியில் ஏற்கெனவே விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, … Read more

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி கோவையில் மலர் அஞ்சலி!

கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி கோவையில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.