காங்கிரஸில் கோஷ்டி பூசலால் குமரியை சேர்ந்தவர் நெல்லை வேட்பாளரானார்!

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலால் மக்களவை தொகுதி வேட்பாளரை அறிவிப்பதில் கடைசிவரை இழுபறி நீடித்தது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். நாளை பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் குறைந்த காலஅவகாசமே உள்ள நிலையில், திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் பெயரை அறிவிப்பதில் நீண்ட தாமதம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், திருநெல்வேலி தொகுதி … Read more

மக்களவைத் தேர்தல் | தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் இன்று (மார்ச் 26) காலை வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், … Read more

100% ஆன்லைன் வேட்புமனு தாக்கலை அமல்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அலுவலர்கள் யோசனை

சென்னை: போக்குவரத்து நெரிசல் உட்பட பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க, தேர்தல்களில் 100 சதவீதம் ஆன்லைன் வேட்புமனு தாக்கலை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 96.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 10.50 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய தேர்தல் கட்டமைப்பை … Read more

10ஆம் பொதுத்தேர்வு இன்று தொடக்கம்! மாணவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து..

10th Public Exam Starts Today : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, இன்று தொடங்கவுள்ளதை ஒட்டி, தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தென் தமிழகத்தில் 31-ல் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்றுமுதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் … Read more

அதிமுக சின்னம், கொடி விவகாரம்: ஐகோர்ட் உத்தரவால் ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவு

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது ஓபிஎஸ் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை … Read more

உதகையில் வேட்புமனு நிகழ்வில் பாஜக – அதிமுகவினர் இடையே ‘சம்பவம்’ – போலீஸ் தடியடியால் பரபரப்பு

உதகை: உதகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற வேட்புமனு தாக்கல் நிகழ்வின்போது அதிமுக, பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால், கூட்டத்தை கலைக்க காவல் துறை லேசான தடியடி நடத்தினர். இதில், பரபரப்பான இந்தச் சம்பவத்தில் சிலர் காயமடைந்தனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் ஆ.ராசா, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக … Read more

“ஜெயிலில் இருந்து பெயில்… பெயிலில் இருந்து ஜெயில்!” – இண்டியா கூட்டணி தலைவர்களை கலாய்த்த சுதாகர் ரெட்டி

கிருஷ்ணகிரி: “தமிழ் கலாச்சாரம், மக்களின் பெருமையை பிரதமர் மோடி உலகளவில் பரப்பி வருகிறார். அவரது தமிழக வருகையை பார்த்து திமுகவினர் அச்சமடைந்துள்ளனர். மோடியின் வளர்ச்சியை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை” என பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி அலை வீசுகிறது. இதனால் மக்களவைத் தேர்தலில் 370 இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம். ஏனெனில், நாட்டின் 500 ஆண்டுகள் பிரச்சினையை தீர்த்து … Read more

“பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்…” – நெல்லை பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருநெல்வேலி: “மக்கள் இடையே வெறுப்பை விதைத்து பிளவை உண்டாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது. மேம்பட்ட சிந்தனைகளைக் கொண்ட நாம் நமது சகோதர, சகோதரிகளுக்கு வழிகாட்ட வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துக் கூற வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் என்று புரிய வைக்க வேண்டும்” என்று திருநெல்வேலியில் நடந்த திமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் … Read more

‘ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் பாஜகவை வெளியேற்றுவார்கள்’ – கனிமொழி

சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார் கனிமொழி. இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்த முக்கிய தகவல்கள் குறித்து விரிவாக பார்ப்போம். “மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஒவ்வொரு நகர்வையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களை நோக்கி யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என பாஜகவினர் விரும்புகின்றனர். அதன் காரணமாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது சாமானிய மக்களையும் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அதற்காக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான … Read more