2 சக்கர வாகன கடனுக்கு எது சிறந்தது.. எங்கு வட்டி குறைவு..! #banks #2wheelerloan

கொரோனா வைரஸின் வருகைக்கு பிறகு மக்கள் வாழ்வியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக சமூக இடைவெளி விட்டு செல்லுதல், மாஸ்க் அணிந்து செல்லுதல் பல மாற்றங்கள் வந்துள்ளன.

குறிப்பாக பலரும் பொதுப்போக்குவரத்தினை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மாறாக அதிகளவில் தனிப்பட்ட போக்குவரத்தினையே விரும்புகின்றனர்.

3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

பொதுவாக நடுத்தர மக்கள் என பலரும் பயன்படுத்தும் வாகனம் இரு சக்கர வாகனமே. இதனையே மக்கள் பாதுகாப்பாக நினைக்கின்றனர். இதன் மூலம் சரியாக சமூக இடைவெளியினை கடைபிடிக்க முடியும் என நம்புகின்றனர். இதற்கிடையில் தான் இருசக்கர வாகனத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.

கார் Vs இருசக்கர வாகனம்

கார் Vs இருசக்கர வாகனம்

ஒரு காரினை வாங்கினால் அதற்கு ஆகும் செலவு, மாத தவணையை விட, இருசக்கர வாகனங்களுக்கு ஆகும் செலவு, எரிபொருள் செலவு என பார்க்கும்போது, இரு சக்கர வாகனங்கள் தான் சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது. அப்படி செலுத்துபவர்கள் இருசக்கர வாகனம் வாங்க நினைக்கும் அனைவரும், முழுவதுமாக தொகையை செலுத்தி வாங்கிவிடுவதில்லை. மாறாக பலரும் வங்கிக் கடனையே நாடுகின்றனர்.

 பேங்க் ஆப் இந்தியா & பஞ்சாப் நேஷனல் வங்கி

பேங்க் ஆப் இந்தியா & பஞ்சாப் நேஷனல் வங்கி

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம்.

பேங்க் ஆப் இந்தியவில் வட்டி விகிதம் வருடத்திற்கு 6.85%ல் ஆரம்பமாகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணம் 500 – 1000 ரூபாய் வரையில் விதிக்கப்படுகிறது.

இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு, 8.65%ல் ஆரம்பமாகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணமாக லோன் தொகையில் 0.5% வசூலிக்கப்படுகிறது.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா & எஸ்பிஐ
 

யூனியன் பேங்க் ஆப் இந்தியா & எஸ்பிஐ

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் வருடத்திற்கு, 9.90%ல் ஆரம்பமாகிறது.

எஸ்பிஐயில் வட்டி விகிதம் வருடத்திற்கு, 16.25%ல் ஆரம்பமாகிறது. செயல்பாட்டுக் கட்டணம் கடன் தொகையில் 2% + ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

ஆக்ஸிஸ் வங்கி & HDFC வங்கி

ஆக்ஸிஸ் வங்கி & HDFC வங்கி

ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு, 10.8.%ல் ஆரம்பமாகிறது. செயல்பாட்டுக் கட்டணம் கடன் தொகையில் 2.5% வரையில் ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது.

ஹெச் டி எஃப் சி வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு, 14.50%ல் ஆரம்பமாகிறது. செயல்பாட்டுக் கட்டணம் கடன் தொகையில் 2.5% வரையில் ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது.

பேங்க் ஆப் பரோடா & யூகோ வங்கி

பேங்க் ஆப் பரோடா & யூகோ வங்கி

பேங்க் ஆப் பரோடாவில் வட்டி விகிதம் வருடத்திற்கு, BRLLR + strategic Premium onwords 10.8.%ல் ஆரம்பமாகிறது. செயல்பாட்டுக் கட்டணம் கடன் தொகையில் 25% வரையில் ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 250 ரூபாய் + GST வசூலிக்கப்படுகிறது.

யூகோ வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு,UCO float rate + 4.80%ல் ஆரம்பமாகிறது. செயல்பாட்டுக் கட்டணம் கடன் தொகையில் 1% வரையில் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Two wheeler Loan Interest Rates 2022: where is best for two wheeler loan rate

Two wheeler Loan Interest Rates 2022: where is best for two wheeler loan rate/2 சக்கர வாகன கடனுக்கு எது சிறந்தது.. எங்கு வட்டி குறைவு..! #banks #2wheelerloan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.