பணி ஓய்வுபெற்ற 26 போலீஸார்: பாராட்டி வழியனுப்பிய சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் நேற்று பணி ஓய்வுபெற்ற 26 போலீஸாருக்கு சான்றிதழ் வழங்கி காவல் ஆணையர்அருண் பாராட்டி வழியனுப்பி வைத்தார். சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றிய 14 காவல் உதவி ஆய்வாளர்கள், 10 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் உட்பட26 பேர் நேற்றுடன் பணி ஓய்வுபெற்றனர். 25 முதல் 39 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அவர்களுக்கு பிரிவு உபசார விழா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்றுநடைபெற்றது. இந்நிலையில் பணி ஓய்வு பெற்றவர்களை அழைத்து … Read more

வயநாடு நிலச்சரிவுக்கு ‘காலநிலை மாற்றம்’ மட்டும் காரணம் அல்ல… ஏன்? | HTT Explainer

வயநாட்டில் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொண்ட வரலாறு காணாத நிலச்சரிவுக்கு வைக்கப்படும் முதன்மையான காரணம் என்பது காலநிலை மாற்றமாக இருந்தாலும், அந்த மாற்றம் நிகழக் காரணமான வேர்களை அறிந்து, அதற்கேற்ப அரசு கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டிய தருணம் உணர்த்தப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். காலநிலை மாற்றம், வலுவிழந்த நிலப்பரப்பு, அருகி வரும் வனப்பரப்பு ஆகியன வயநாடு வரலாறு காணாத நிலச்சரிவுக்கு சரியான காரணமாக அமைந்துள்ளன என்று சொன்னால் அது மிகையல்ல. இதனை உறுதிப்படுத்த நிறைய தரவுகளும் இருக்கின்றன. … Read more

அடேங்கப்பா விஜய் சேதுபதி கையில் இவ்வளவு படங்களா?.. செம லைன் அப்பா இருக்கே

சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருந்தார். இந்தச்

ஈரானிலும் உலகிலும் ஏற்படக்கூடிய நிலைகளினால் இலங்கைக்கு வரக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள 03 விசேட குழுக்களை நியமித்தார் ஜனாதிபதி

ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 விசேட குழுக்களை நியமிதுள்ளார். இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்றும், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருப்பதோடு அந்த இரண்டு குழுக்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான உயர்மட்ட குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.   பொதுமக்கள் … Read more

Paris Olympics 2024 Live Updates : டாப் கியரில் இந்திய முகாம்; வெற்றி மேல் வெற்றி! Day 5 Updates

ஹெச்.எஸ்.பிரணாய் வெற்றி ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் குரூப் சுற்று போட்டியில் வியட்நாம் வீரர் லீயை 16-21, 21-11, 21-12 என்ற செட் கணக்கில் வென்று ரவுண்டு ஆப் 16-க்கு தகுதிபெற்றார இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய். வில்வித்தையில் தோல்வி! வில்வித்தையின் ரவுண்ட் ஆப் 64 சுற்றில் பிரிட்டன் வீரர் டாம் ஹாலுக்கு எதிராக 6-4 என்ற செட் புள்ளிகளின் கணக்கில் இந்திய வீரர் தருண்தீப் தோல்வி. மனிகா பத்ரா தோல்வி! டேபிள் டென்னிஸின் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் ஜப்பானை … Read more

சவுக்கு சங்கருக்கு திடீர் உடல்நல பாதிப்பு: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சேலம்: யூடியூபர் சவுக்கு சங்கரை போலீஸார் சென்னைக்கு அழைத்து செல்லும் வழியில், வயிற்று வலி ஏற்பட்டதால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. பெண் போலீஸாரை பற்றி அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அதேபோல, நீலகிரி போலீஸாரும் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். சென்னை புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கரை, உதகை குற்றவியல் நடுவர் மன்றத்தில் … Read more

கணவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் சுட்டுக் கொலை: டெல்லியில் பயங்கரம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கோகுல்புரி பகுதியில் நடந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதியம் 3.15 மணி அளவில் இந்த பயங்கர செயல் அரங்கேறியுள்ளது. ஹீரா சிங் என்பவர் தனது மனைவி சிம்ரன்ஜித் கவுர் உடன் புல்லட் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கோகுல்புரி பாலத்தில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாகனமும் ஒன்றை ஒன்று உரசிக் … Read more

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் : இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய விரர்

பாரிஸ் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  நடந்து வரும் 33 ஆவது ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்றுள்ளது.  இன்று ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல்(50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று) போட்டி நடைபெற்றது. போட்ட்யில் இந்திய … Read more

இன்னொரு நடிகையர் திலகம் ரெடியா?.. கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டிரெய்லர் விமர்சனம் இதோ!

சென்னை: அறிமுக இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், தேவதர்ஷினி, எம்.எஸ். பாஸ்கர், ரவிந்திர விஜய், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தி திணிப்பை ஹைலைட் செய்து வெளியான டீசர் கிளப்பிய அளவுக்கு பரபரப்பை டிரெய்லர் கிளப்பவில்லை. அதற்கு காரணம் பாலிவுட்டில்

டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: திண்டுக்கல் அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக்

திண்டுக்கல், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் சந்தோஷ் ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா அபராஜித்துடன், ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார். இதில் பாபா அபரஜித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் … Read more