திமுகவுக்கு ஆதரவு: 10அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக 10அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,  திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  அறிவிக்கப்பட்டு நிலையில், வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாற்றுக்கட்சியை இழுக்கும் குதிரை பேரமும் நடைபெற்று வருகிறது. பல வேட்பாளர்கள் மாற்று கட்சியினருக்கு ஆதரவு அளித்து வரும் அவலங்களும், சிலர் கடத்தப்படுவதும், மிரட்டப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக,தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுதல்; திமுக-வினருக்கு ஆதரவாக செயல்படுதல் மற்றும் கழக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடுதல் முதலான காரணங்களாலும், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.நீக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த,

  1. திரு. K. மாதவராமானுஜம்,(தச்சநல்லூர் வடக்கு பகுதிக் கழகச் செயலாளர்)
  2. திரு. மணிமாளிகை M. கணேசன், (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிப் பொருளாளர் )
  3. திரு. செ. பாலசுப்பிரமணியன்,(10-ஆவது வட்டக் கழகச் செயலாளர்,தச்சநல்லூர் தெற்கு பகுதி)
  4. திருமதி B. விஜி,(க/பெ. பாலசுப்பிரமணியன்)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த,

  1. திரு. N. கரிகாலன் (எ) ரமேஷ், (மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளர்)

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த,

  1. திரு. M. அங்குசாமி, (ராமநாதபுரம் நகரக் கழகச் செயலாளர் )
  2. திரு. TR.சீனிவாசன்,(ராமநாதபுரம் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் )

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த,

  1. திரு.M.கண்ணாயிரம், (கழகப் பொதுக்குழு உறுப்பினர், உடுமலைப்பேட்டை தொகுதி)
  2. திரு. M. கெபீர்,(சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக் கழக அவைத் தலைவர்)
  3. திரு. K. குமரேசன்,(உடுமலைப்பேட்டை நகர 10-ஆவது வார்டு கழகச் செயலாளர் )

ஆகியோர்,கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளார்கள், இதனால்,அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.