நரகத்துல இருக்குற மாதிரி இருக்கு.. நெட்டிசனின் 'அந்த' மாதிரி கமெண்ட்டால் கடுப்பான நந்திதா..!

நடிகைகள் சோஷியல் மீடியாவில் பகிரும் புகைப்படங்களுக்கு பலவிதமான கமெண்ட்கள் வருவது வழக்கம். பெரும்பாலான நடிகைகள் இணையத்தில் வரும் எதிர்மறை கருத்துக்களை பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் நடிகை நந்திதா தனது உடலமைப்பு குறித்து கமெண்ட் செய்த ரசிகர் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா. இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தில் குமுதா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப்படத்தில் வரும் ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘எதிர்நீச்சல்’, விஷ்ணு விஷாலின் ‘முண்டாசுப்பட்டி’, புலி, உப்புக்கருவாடு உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘
நெஞ்சம் மறப்பதில்லை
‘ படத்தில் எஸ்.ஜே. சூர்யா மனைவியாக நடித்திருந்தார்.

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்தில் அடுத்து நடக்க போவது என்ன..?: பிரபல நடிகர் பரபரப்பு தகவல்..!

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது உடலமைப்பு குறித்து பேசிய நெட்டிசனின் கமெண்ட்டிற்கு காட்டமாக பதிலளித்துள்ளார் நந்திதா. அதாவது நெட்டிசன் ஒருவன் நந்திதாவின் புகைப்படத்திற்கு, ‘தயவு செய்து உங்கள் உடலை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் வடிவங்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆண்ட்டி போல் இருக்கீங்க. ஒழுங்கா ஒர்க் அவுட் செய்ங்க’ என தெரிவித்திருந்தார்.

Nandita Insta

இதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நந்திதா, ‘இப்படிப்பட்டவர்களால் நரகத்தில் இருப்பது போல இருக்கிறது. நான் ஒன்றும் பெண் கடவுள் இல்லை. நானும் ஒரு சாதாரண மனுஷி தான். எல்லோரையும் போல நானும் கஷ்டப்படுகிறேன். எப்படி இப்படி வார்த்தைகளை பேச முடிகிறது. நான் என் உடலை நேசிக்கிறேன். நான் இப்போது இருக்கும் விதம், நான் தோன்றும் விதம் எனக்கு பிடிக்கிறது’ என காட்டமாக பதிலளித்துள்ளார்.

பத்து தல Glimpse ஏன் இப்படி இருக்கு! படத்தில் நயன்தாரா வேடம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.