இந்தியாவுக்கு அபாயம் காத்திருக்கு.. சீனா வாலாட்டப் போகிறது.. அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவின் பூகோள அமைப்பில் மாற்றங்கள் வரப் போகிறது. குறிப்பாக சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு பெரும் சவால்கள் காத்துள்ளன என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதே எச்சரிக்கையைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கொடுத்து வருகிறார். எல்லைப் பகுதியில்
சீனா
பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. குடியிருப்புகளைக் கட்டுகிறது, பாலம் கட்டுகிறது. ஆனால்
இந்தியா
கவலைப்படாமல் இருப்பதாக ராகுல் குற்றம் சாட்டி வருகிறார். சீனாவும், பாகிஸ்தானும்தான் இந்தியாவுக்கு அபாயகரமானவையாக உள்ளன. அதுகுறித்து இந்தியா தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரி வருகிறார்.

பாஜகவைச் சேர்ந்தவரான சுப்பிரமணியம் சாமியும் கூட தொடர்ந்து சீன விவகாரத்தில் இந்தியா சுதாரிப்பாக இல்லை என்று எச்சரித்து வருகிறார். நேபாள நாட்டை நமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். நேபாளமும், சீனாவை உதறி விடவே விரும்புகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சீனாவுக்கு நாம் நெருக்கடி தர வேண்டும் என்று அவரும் கூறி வருகிறார்.

“வேர்டில் ஸ்கோர்” வரலையே.. மம்மிக்கு என்னாச்சோ.. பதறிய மகள்.. மீட்கப்பட்ட பாட்டி!

இந்த நிலையில் சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு அபாயம் காத்திருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா. இந்தியா – பசிபிக் தந்திரோபாய அறிக்கையை அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. அதில்தான் சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு நிலவும் சவால்கள் குறித்து அது விளக்கியுள்ளது.

ஜோ பிடன் அதிபரான பிறகு வெளியாகும் முதல் அறிக்கை இது. இந்த அறிக்கையை நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்டது. தெற்காசியாவில் இந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய விவரங்கள் வருமாறு:

அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து பிராந்திய அளவில் கூட்டு செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளும் செயல்படும். சுகாதாரம், விண்வெளி, சைபர் துறை, பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்.

தெற்காசியாவில் இந்தியா முன்னணி நாடு, வலுவான நாடு. அமெரிக்காவின் விருப்ப நாடாகவும் இந்தியா திகழ்கிறது. தென் கிழக்கு ஆசிய கடற் பரப்பிலும் இந்தியா முக்கியமான நாடாக திகழ்கிறது என்று அதில் முக்கியமாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், இந்தியா சீனா தொடர்பாகவும் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவுக்கு சில முக்கியமான சவால்கள் காத்திருக்கின்றன. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு எதிரானதாக இருக்கிறது. இந்தியாவை பாதிக்கக் கூடிய வகையிலான நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளது. பூகோள ரீதியில் பல மாற்றங்களை இந்தியா சந்திக்கவுள்ளது. இந்த மாற்றங்கள் சீனாவிடமிருந்து வரும் என்பதால் இந்தியா கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இந்தியாவுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து நாங்கள் செயல்படுவோம் என்றார் அவர்.

ஆஸ்திரேலியாவில் குவாத் அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெறும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சீனாவின் போக்கைக் கண்டித்துப் பேசினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.