கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டில் இலங்கை… 40,000 டன் பெட்ரோல், டீசலை கொடுத்த இந்தியா

கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பியுள்ளது.
இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து அங்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதால் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா 40,000 டன் பெட்ரோல், டீசலை விநியோகம் செய்துள்ளது. இந்திய தூதர் கோபால் பாக்லே இந்திய எண்ணெய் கழகம் வழங்கிய 40,000 டன் எரிபொருளை இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்.

இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே 15 நாள்களில் இந்தியா வரவுள்ள நிலையில் அந்நாட்டுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: “எல்லா கட்சிக்கும் சென்றுவந்த கரூர் அமைச்சர் தேமுதிகவுக்கு வந்தாலும் வருவார்” – பிரேமலதாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.