சிறுநீரகம் தானம் பெற்றவர்கள் திருமணம்| Dinamalar

பெங்களூரு : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மீண்ட இருவர், காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர்.பெங்களூரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு, 30 ஆண்டுக்கு முன் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. முதல் குழந்தையை இழந்தனர். அதன் பின், அபினாஷ் என்ற மகன் பிறந்தார். ஆரம்பத்தில் மற்ற குழந்தைகள் போல் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. காலப்போக்கில், அபினாசுக்கும் சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 2013ல் தாய், தன் மகனுக்கு ஒரு சிறுநீரகம் வழங்கினார். ஆனால், அந்த அறுவை சிகிச்சை பலனளிக்கவில்லை. மீண்டும், 2015ல் இவரின் அத்தை, சிறுநீரகம் வழங்கினார். இதனால், மகிழ்ச்சியடைந்தார். தற்போது, இவருக்கு வயது 30.இதேபோல, சிறுநீரக பாதிப்பால், மருத்துவமனையில் பவித்ரா வாணி, 30, என்பவர், 2015ல் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கும் இரு சிறுநீரகமும் பழுதடைந்தது. உறவினர்கள் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. மருத்துவமனையில் இருக்கும் போது, இவருக்கும், அபினாசுக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.சிறுநீரகம் தானம் பெற்ற ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ முடியும் என்பதை அறிந்த இருவரும், தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். காதலர் தினமான நேற்று முன்தினம், இருவருக்கும் திருமணம் நடந்தது. சிகிச்சை அளித்த டாக்டர் சங்கரன் உட்பட, உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.அபினாஷ் கூறுகையில், ”எங்களுக்கு, வாழ்க்கை மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை வரமாக கருதுகிறோம். உறுப்புகள் தானம் செய்வதில் போதுமான விழிப்புணர்வு இல்லாததால், பலர் தானம் செய்ய அச்சப்படுகின்றனர். ”எங்களை பார்த்து, மற்றவர்கள் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வருவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.