சிகிச்சை அளித்த ஆய்வாளரையும், உதவியாளரையும் விரட்டிய காண்டாமிருகம்… மரத்தின் மீதேறி தப்பிய இருவர்! <!– சிகிச்சை அளித்த ஆய்வாளரையும், உதவியாளரையும் விரட்டிய காண்… –>

தென் ஆப்பிரிக்காவில் சிகிச்சை அளித்த ஆய்வாளரையும், உதவியாளரையும் காண்டாமிருகம் விரட்டியடித்த வீடியோ வெளியாகி உள்ளது. டாம் ஃப்ரூ என்பவர் காண்டாமிருகங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

காண்டாமிருகங்களுக்கு மயக்கமருந்து கொடுத்து அவைகளுக்கு காலர் ஐடி பொருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட காண்டாமிருகம் ஒன்று திடீரென மயக்கம் தெளிந்து டாம் ஃப்ரூவையும் அவரது உதவியாளரையும் விரட்டியது.

இதனால் அச்சமடைந்த இருவரும் அருகில் இருந்த மரம் ஒன்றில் ஏறி உயிர் தப்பினர். தற்போது இந்த வீடியோ இணைத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.