ரஹ்மானின் வெளியாகாத பாடல்

ரஹ்மானின் வெளியாகாத பாடல்

ரஹ்மானின் வெளியாகாத பாடல்

2/18/2022 2:54:10 PM

ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை வெளிவராத படத்தின் பாடல் ஒன்றின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான்,  விக்ரம் நடித்துவரும் கோப்ரா, மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் மற்றும் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் இரவின் நிழல் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடலொன்றை கம்போஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் உள்ள பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்டதாகவும், இந்த பாடல் எந்த படத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ரஹ்மானின் இந்த பதிவிற்கு பெரும்பாலானோர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்திற்கான பாடல் என்று பதிலளித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.