20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரசன்னா- கனிகா ஜோடி

பிரசன்னா – கனிகா ஜோடி 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் '5 ஸ்டார்'. இந்த படத்தில் தான் பிரசன்னா, கனிகா நடிகர்களாக அறிமுகமானார்கள். அதன்பின் இருவரும் தனித்தனியாக பல படங்களில் நடித்தனர். தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரசன்னாவும் , கனிகாவும் இணைந்து அஹா ஓடிடி தளம் தயாரிக்கும் ஒரு புதிய இணைய தொடரில் நடிக்கிறார்கள். இயக்குனர் பாலாஜிமோகனின் உதவி இயக்குனர் விக்னேஷ் விஜயகுமார் என்பவர் இயக்குகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.