ரஷ்யா-பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சி – மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

மாஸ்கோ,
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

இதற்கிடையில் உக்ரைன் எல்லையில் 1 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளதால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. உக்ரைன் மீது முழுமையாக படையெடுப்பதற்கு தேவையான ராணுவ படைகளில் 70 சதவீதத்தை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
இந்த நிலையில் உக்ரைன் நாட்டுடன் நீண்ட தெற்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள பெலாரஸ் நாட்டின் ராணுவத்துடன் இணைந்து ரஷ்ய ராணுவம் 10 நாட்கள் கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டது. ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் வீரர்கள் பெலாரஸ் நாட்டில் அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டுப் பயிற்சிகள் நேற்றுடன் முடிவடையவிருந்த நிலையில் பயிற்சிகள் மேலும் தொடரும் என பெலாரஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் விக்டர் கெரெனின் அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் எல்லையில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதால் இந்த பயிற்சியை நீட்டித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளடு குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.