‘ஜோசப்’ ரீமேக்: ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ’ஜோசப்’ படத்தினை ஆர்.கே சுரேஷ் நடிப்பில் ரீமேக் செய்துள்ளார், இப்படத்தின் தயாரிப்பாளர் பாலா. தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட, ‘அது விபத்தல்ல திட்டமிட்டக் கொலை’ என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மிரட்டியிருப்பார். மலையாளத்தில் பாராட்டுகளும் வெற்றியையும் குவித்த இந்தக் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் ‘விசித்திரன்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

image

ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார். கடந்து ஆண்டு வெளியான இப்படத்தின் டீசரும் கவனம் ஈர்த்திருந்தது. இந்த நிலையில், ‘விசித்திரன்’ வரும் மே மாதம் 20 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.