ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. கனடாவின் அதிரடி முடிவு.. உலக நாடுகளுக்கும் பாதிப்பா?

உக்ரைன் – ரஷ்யா பதற்றமானது பேச்சு வார்த்தைக்கும் மத்தியிலும் இன்னும் பூதாகரமாகியுள்ளது. இது இன்னும் சுமூக தீர்வு ஏற்படவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என 30-க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கண்ட நாடுகள் பல வகையிலும் உக்ரைனுக்கு உதவிகளை செய்து வருகின்றன.

ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடை, ஸ்விப்ட் தடை, பல்வேறு நாட்டு நிறுவனங்களும் ரஷ்ய நிறுவனங்கள் உடனான வணிக உறவினையும் முறித்துக் கொண்டு வருகின்றன.

எங்களை ஒன்றும் செய்ய முடியாது

எங்களை ஒன்றும் செய்ய முடியாது

எனினும் இதெல்லாம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்திக் கொண்டே தான் வருகின்றது. சொல்லப்போனால் முன்பை விட கடுமையான தாக்குதல்கள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது. தற்போதைய நிலையில் குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

மக்கள் தாக்குதல்

மக்கள் தாக்குதல்

சில இடங்களில் மக்கள் தங்களை காத்துக் கொள்ள ரஷ்ய படைகள் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். மொத்தத்தில் ரஷ்யா உக்ரைன் பதற்றமானது மேற்கொண்டு பூதாகரமாக உருவெடுத்து வருகின்றது. இதற்கிடையில் கனடா உக்ரைனுக்கு ஆதரவினை தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவில் இருந்து தனது எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளது.

கனடா தடை
 

கனடா தடை

இதன் மூலம் ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் எண்ணெய் வணிகத்திலேயே, சொல்லப்போனால் ரஷ்யாவின் அடிமடியிலேயே கைவைத்துள்ளது கனடா. இது ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் எண்ணெய் வணிகத்தினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளை குறி வைக்கும் நடவடிக்கை

வங்கிகளை குறி வைக்கும் நடவடிக்கை

கனடாவிற்கு ரஷ்யா பெரியளவில் எண்ணெய் இறக்குமதி செய்யாவிட்டாலும், நிச்சயம் இது ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்ய வங்கிகாளை குறி வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. ரஷ்யா அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணெய் மற்றும் கேஸ் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கான தொகையினையும் வங்கிகள் மூலமே பரிமாற்றம் செய்து வருகின்றது.

கனடாவின் இறக்குமதி

கனடாவின் இறக்குமதி

இந்த நிலையில் வங்கிகளில் பண பரிவர்த்தனை தடைப்பட்டால், அது நிச்சயம் ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கலாம். எனினும் ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாமல், கனடா பெரியளவில் எண்ணெய் இறக்குமதியினை ரஷ்யாவினை நம்பியிருக்கவில்லை. எனினும் இதனால் தாக்கம் இருக்கலாம். கடந்த 2021ல் கனடா 170 மில்லியன் பவுண்டு மதிப்பிலான எண்ணெயினை இறக்குமதி செய்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி

ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி

எவ்வாறயினும் ஐரோப்பிய ரஷ்யாவின் விநியோகத்தை பெரிதும் சார்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் இறக்குமதியில் 4ல் ஒரு பங்கு ரஷ்யாவிலிருந்து வருகிறது. அதேபோல இயற்கை எரிவாயு இறக்குமதி 40% ஆகும். ஆக ஐரோப்பிய நாடுகளின் தடை மிக கடுமையாக இருக்கும். எனினும் இது குறித்து ரஷ்யா தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

பாதிப்பு ஏற்படலாம்

பாதிப்பு ஏற்படலாம்

எப்படியிருப்பினும் சர்வதேச அளவில் ரஷ்யாவின் தடைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் பாதித்தால், அது விலை அதிகரிப்பினை எட்டலாம். இதுவும் உலக நாடுகளை பாதிக்கலாம். எப்படியிருப்பினும் ரஷ்யாவின் மீதான பொருளாதார தடையானது, உலக நாடுகள் மீதும் எதிரொலிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Canada announces ban imports of crude oil from Russia

Canada announces ban imports of crude oil from Russia/ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. கனடாவின் அதிரடி முடிவு.. உலக நாடுகளுக்கும் பாதிப்பா?

Story first published: Tuesday, March 1, 2022, 11:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.