பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் 'Nothing' டீஸர்!

ஒன்பிளஸ் நிறுவனர்களில் ஒருவரான கார்ல் பெய், தனியாக வந்து ‘Nothing’ எனும் புதிய டெக் பிராண்டைத் தொடங்கினார். அதன் முதல் தயாரிப்பாக நத்திங் இயர் 1 வயர்லெஸ் இயர்பட்ஸ், உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய தோற்றம், நேர்த்தியான அம்சங்கள் கொண்டு இந்த இயர்பட்ஸ் களமிறக்கப்பட்டது. இயர்பட்ஸின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் அனைத்தும் வெளியே தெரியும்படி, கண்ணாடியால் உருவாக்கப்பட்டிருந்தது நத்திய இயர் 1 வயர்லெஸ் இயர்பட்ஸின் கூடுதல் சிறப்பு.

டிவி மார்க்கெட்டில் கால்பதிக்கும் Asus நிறுவனம் – மார்ச் 3 புதிய OLED டிவிக்கள் அறிமுகம்!

சந்தையில் அறிமுகமான சில நாள்களில், நத்திங் இயர்பட்ஸ் பயனர்களின் நன்மதிப்பைப் பெற்றது. இந்நிலையில், நத்திங் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு என்ன என்பது குறித்து டெக் விரும்பிகள் மத்தியில் பெரும் சலசலப்பு இருந்து வந்தது.

நத்திங் புதிய டீஸர்

இதற்கு ஊட்டமளிக்கும் விதமாக, நத்திங் நிறுவனமும், தாங்கள் புதிய 5 தயாரிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக அறிவித்தது. அதிலிருந்து, பயனர்கள் மத்தியில், இந்த பிராண்டின் புதிய தயாரிப்புகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

நத்திங் வயர்லெஸ் ஹெட்போன்ஸ், நத்திங் பவர்பேங்க், நத்திங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என வரிசைகட்டி கதைகள் கசிந்த வண்ணம் இருந்தன. இச்சூழலில், நத்திங் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புதிய டீஸர், அனைவரின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

அதாவது டெக் வல்லுநர்களின் கூற்றுபடி, புதிய தகவல் சாதனம் நத்திய போன் 1 ஸ்மார்ட்போன் அல்லது
நத்திங் பவர் 1
பவர்பேங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகனுடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

புதிய iPhone SE 3 விலை இவ்வளவு தானா – இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் ஆப்பிள்!

ஸ்மார்ட்போன் வெளியிடுமா நத்திங்

இதுவரை வெளியான தகவல்களை வைத்து பார்க்கும்போது, நத்திங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஸ்மார்ட்போனும் டிரான்ஸ்பரன்ட் வடிவமைப்புடன் வரும் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் கொண்டு இயக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல், ஸ்மார்ட் கேமரா, ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ் உடன்
நத்திங் போன் 1
வெளியாகலாம் என நம்பப்படுகிறது.

அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன், 4210mAh பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நிறுவனத்திடம் இருந்து எந்தவித உறுதிபடுத்தப்பட்ட தகவலும் கிடைக்கவில்லை. எனினும், பார்சினோனாவில் நடந்துவரும் MWC 2022 நிகழ்வில் நத்திங் தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படலாம் என டெக் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

நத்திங் இயர் 1 வயர்லெஸ் இயர்பட்ஸ்

Nothing Ear 1 best buy link

நத்திங் இயர் 1 ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சல்லேஷன் (ANC), டிரான்ஸ்பிரென்ட் மோட், டச் கண்ட்ரோல்ஸ், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற அம்சங்களை வழங்குகிறது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ.6,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

iPhone-ஐ மிஞ்சும் கேமரா… Oppo Find X5 Pro 5G போனில் எல்லாமே ஸ்பெஷல் தான்!

நத்திங் இயர்பட்ஸ், ஆடியோ அவுட்புட்டை மேலும் மாற்றியமைக்க EQ உடன் பொருத்தப்பட்டுள்ளன. இது In-ear detection ஆனது காதுகளில் இருந்து பட்ஸ் அகற்றப்படும்போது உடனடியாக ஆடியோவை இடைநிறுத்துகிறது. மேலும் பல்வேறு அம்சங்கள் இந்த நத்திங் இயர் 1 இயர்பட்ஸில் அடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.