உக்ரைனில் பணயக் கைதிகளாக இந்தியர்கள்? இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்

உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் யாரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை என உக்ரைனில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எந்த நேரத்திலும் ஆபத்து நிகழலாம் என்று கருதி கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் நேற்று அவசர அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஆனால், சில இடங்களில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் உக்ரைன் வீரர்களால் தடுக்கப்பட்டிருந்தார்கள் என்று செய்திகள் வெளியாகின. இதனால்,அவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

image
இந்நிலையில்,உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் யாரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை என  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய மாணவர்களை மீட்டு, அவர்களை தாயகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளதாகவும், இந்திய மாணவர்களை எல்லைக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்க உக்ரைன் நாட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க: உக்ரைனில் அனைவரின் கையிலும் ஆயுதம் – அதிகரிக்கும் கொள்ளை, பாலியல் சம்பவங்கள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.