உக்ரைனில் உணவுத் தட்டுப்பாடு… போர் நிறுத்தம் மீறல் – பரஸ்பர குற்றச்சாட்டு!

அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணையக் கூடாது என்று
ரஷ்யா
எச்சரிக்கை விடுத்து வந்தது. இதை
உக்ரைன்
அரசு புறக்கணித்த நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி அந்த நாட்டின் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவுடன் ரஷ்யாவுக்கு எதிரான போரை உக்ரைன் மேற்கொண்டு வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே 12ஆவது நாளாக போர் நீடித்து வருவதற்கிடையே, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ளமேரிபோல், கிழக்கில் உள்ள வோல்னோவாகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்யா அறிவித்தது.

ஆனால், போர் நிறுத்தத்தை ரஷ்ய ராணுவம் கடைபிடிக்கவில்லை. மேரிபோல் நகரம் மீது ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்ய தரப்பு, பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க உக்ரைன் ராணுவமே தாக்குதல் நடத்தி வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைனில் 12ஆவது நாளாக போர் நீடிப்பதால், தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

அடம் பிடிக்கும் விளாடிமிர் புடின் – போரை நிறுத்த முடியாது என கறார்!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இரு தரப்புக்கும் இடையெ இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. எனினும், ஆக்கப்பூர்வ முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.