தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை

மிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன எனத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே பல்வேறு துறைகளிலும் பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.   இவை அனைத்தும் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி நடந்து வருகிறது.

அவ்வகையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  உத்தரவுப்படி மக்களிடையே விளையாட்டு திறனை மேம்படுத்த 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதையொட்டி தற்போது தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஆய்வு நடந்து வருகிறது.  இந்த ஆய்வு மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.