பசிலின் அதிரடி உத்தரவு – நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 பொருட்களுக்கு தடை



நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

பால், பாலாடை, வெண்ணெய், பேரீத்தம் பழம், அன்னாசிப்பழம், மாம்பழங்கள் அப்பிள், திராட்சை உள்ளிட்ட பழவகைகள், தானியங்கள், சொக்கலேட்டுகள், பழச்சாறுகள், நீர் போத்தல்கள், ஒரு சில பியர்கள், ஒரு சில வைன்கள், சிகரெட்டுகள், வாசனைத் திரவங்கள், சவரத்திற்கு முன்னரும் பின்னரும் பயன்படுத்தும் பொருட்கள், சோப்கள், மெழுகுவர்த்திகள், டயர்கள், அழிப்பான்கள், பயண பெட்டிகள், தோல் பொருட்கள், கார்பட்டுகள், ஆடைகளுக்கான டைகள் மற்றும் ‘போ’க்கள், திரைச்சீலைகள், கட்டில் விரிப்புகள், விளையாட்டு காலணிகள், தொப்பி வகைகள், தலை பட்டிகள், குடைகள், கூந்தல், போலி சிகைகள்,

செரமிக் பாத்திரங்கள், கண்ணாடி பாத்திரங்கள், குக்கர்கள், அடுப்புகள், மேசைகள், சிங் மற்றும் கைகழுவும் பேசின்கள், கரண்டிகள், மணிகள், மின் விசிறிகள், வாயுச் சீராக்கிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள், வக்கும் க்ளீனர்கள், கிறைண்டர்கள், சவர சாதனங்கள், மின்சார மேசை விளக்குகள், நீர் சேமிப்பு சூடாக்கிகள், நிலையான தொலைபேசிகள், வானொலி ஒலிபரப்பு சாதனங்கள், கணனி திரைகள், மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட கண்ணாடி வகைகள்,

கைக்கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், இசைக் கருவிகள், வாகன இருக்கைகள், மின் விளக்கு தொகுதிகள், (முச்சக்கர வண்டி உள்ளிட்ட சக்கரங்கள் கொண்ட) விளையாட்டு வாகனங்கள, பொம்மைகள், வீடியோ கேம்கள், சீப்புகள் மற்றும் கூந்தலுக்கான கிளிப்புகள் உள்ளிட் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இத்தகைய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

முதலாவது நடைமுறைக்கமைய, சில தெரிவு செய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களுக்கு வரி அறவிடப்படும்.

இரண்டாவது நடைமுறைக்கமைய, தெரிவு செய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களை இறக்கமதி செய்ய அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நடைமுறைக்கமைய சில தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு வரி விதிக்கவும் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.