ராமேஸ்வரம் தீவில் மிளகாய் பொடியுடன் சுற்றும் கடத்தல் கும்பல்..! டாட்டூ கலைஞர் காயங்களுடன் தப்பினார்

ராமேஸ்வரம் அருகே டாட்டூ கடை உரிமையாளர் மீது மிளாகாய் பொடி தூவி காரில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்ற மர்ம கும்பல் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தில் அப்துல்கலாம் நினைவில்லம் அருகே லெபனோன் என்பவர் டாட்டூ எனும் பச்சை குத்தும் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 3 ந்தேதி இரவு 7 மணிக்கு இவரது கடைக்கு கஞ்சா போதையில் வந்த 3 பேர் தங்கள் கைகளில் சிவன் படத்தை பச்சை குத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இரவு 10 மணி அளிவில் ஒரு நபருக்கு, லெபனோன் பச்சை குத்தி முடித்த நிலையில் அருகில் இருந்த இருவர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை லெபனோனின் முகத்தில் வீசி உள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து அவரை அப்படியே தூக்கி காரில் போட்டு கடத்திச்சென்றுள்ளனர். வழியில் மேலும் இருவர் அந்த காரில் ஏறிக் கொண்டு லெபனோனை கடுமையாக தாக்கி உள்ளனர்.

ஒரு கட்டத்தில் வலிதாங்காமல் அலரித்துடித்த லெபனோனிடம் , வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து 10 லட்சம் ரூபாய் எடுத்து வரச்சொல்லி மிரட்டி உள்ளனர். மேலும் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, மற்றும் வங்கிகணக்கில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கூகுல் பே மூலம், கடத்தல் கும்பலை சேர்ந்த காளீஸ் என்பவன் தனது வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

அந்த பணம் வந்து விட்டதா ? என்று சரிபார்க்க தனது செல்போனை தேடி உள்ளான். லெபனோனின் கடையில் சார்ச் போட்ட செல்போனை, கடத்தலில் ஈடுபட்ட போது மறந்து விட்டு வந்தது காளீஸுக்கு ஞாபகம் வந்துள்ளது.
உடனடியாக காரை கடைக்கு திருப்பி உள்ளனர். போகும் வழியில் போதை இறங்கியதால் ராம நாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கில் சரக்கு வாங்கு ஒருவர் சென்றுள்ளார். அப்போது காரின் ஜன்னல் வழியாக எகிறி குதித்த லெபனோன் தப்பியுள்ளார். அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டதால் கடத்தல் கும்பல் காருடன் தப்பி உள்ளது.

இதற்கிடையே லெபனோன் கடத்தல் தொடர்பாக வழக்கை விசாரித்த தங்கச்சி மடம் போலீசார் , கடத்தல் கும்பல் மறந்து விட்டுச்சென்ற செல்போனின் பின் பகுதியில் இருந்த அடக்குக்கடை ரசீதை வைத்து காளீஸின் கூட்டாளியான கோபியை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடிவருவதாக கூறி போலீசார் காலம் தாழ்த்துவதாக லெபனோனின் தாயார் பிரேமா குற்றஞ்சாட்டி உள்ளார்

வெளி நாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் போலீசாருக்கு தண்ணிகாட்டி வரும் கஞ்சா குடுக்கி கடத்தல் கும்பலை விரைவாக கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.